இந்திய இயக்கங்கள் சமுதாயத்திற்கு சமூக உணர்வோடு அரணாக திகழ வேண்டும் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் வலியுறுத்து

0
38

சித்தியவான், அக்.14-

இந்திய இயக்கங்கள் சமுதாய நலன் கருதி சமூக உணர்வோடு சமுதாயத்திற்கு அரணாக இருக்க வேண்டும் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

பொது இயக்கங்கள் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு முக்கியப் பங்காற்ற வேண்டும். இந்திய சமுதாயத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும். சமுதாய உணர்வோடு செயல்பட வேண்டும் என்று சித்தியவான் டின்டிங் இயக்கத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ் எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இந்த டின்டிங் இயக்கம் மற்ற இயக்கங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்த இயக்கம் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கி செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இது போன்று மற்ற இயக்கங்களும் செயல்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

இந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியில் சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர். இதில் டின்டிங் இயக்கத்திற்கு டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சொந்த நன்கொடையாக 10 ஆயிரம் வெள்ளியும் ம.இ.கா சார்பில் 10 ஆயிரம் வெள்ளியும் மொத்தம் 20 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here