உள்ளூர் மக்களின் திறனை வெளிக்கொணரும் ஊக்குவிப்பு நிகழ்வு திறனாளர்கள் உஷா நந்தினியின் பாராட்டுதலை பெற்றனர்

0
232

மு.வ.கலைமணி

நிபோங் திபால், நவ.25-
உள்ளூரில் இலைமறை காயாக இருக்கும் பலவகையான திறன்களை கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
அதிலும் சிறார்களின் எண்ணற்ற திறன்கள் ஒழிந்து கிடைப்பதை அறிந்து, அதனை வெளிக்கொணர்ந்து, வெளிச்சம் போட்டுக் காண்பித்ததில் மகளிர்கள் வெற்றிக் கண்டுள்ளனர்.

ம.இ.கா நிபோங் திபால் தொகுதி மகளிர் பகுதியின் ஏற்பாட்டில் “நாளைய தொழில் முனைவர்களை உருவாக்கும் திட்டம்” எனும் தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் ம.இ.கா தேசிய மகளிர் பகுதி தலைவி உஷா நந்தினி சிறப்பு வருகை மேற்கொண்டு நிகவுக்கு முத்தாய்ப்பு வைத்தார்.

பூச்செண்டு தயாரித்தல், கொண்டை மாலை பிண்ணுதல், மருதாணி இடுதல், பனியாரம் சுடுதல் போன்ற கைத்தொழில் திறன்கள் காட்சியாக செய்து காட்டப்பட்டன.

சிறார்களின் திறன்களும் இங்கு வெளிக்கொணரப்பட்டதாக தொகுதி மகளிர் தலைவி பார்வதி கூறினார்.

இந்நிகழ்வின் வழி இங்குள்ள மகளிர்கள் ஒரு உத்வேகம் அடைந்ததோடு ஒன்றுப்பட்டு நற்சேவைகள் செய்ய உறுதிப் பூண்டனர் என மகிழ்ச்சிப் பொங்க அவர் மேலும் தெரிவித்தார்.

தொகுதித் தலைவர்கள், மகளிர் குழுவினர்கள் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாநில மகளிர் பகுதியின் தலைவி பிரேமா மற்றும் மாநில, தொகுதி மகளிர்கள் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here