டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தலைமையில் ம.இ.கா வெற்றிப் பாதையில் பயணிக்கிறது! பத்து கவான் தொகுதி ம.இ.கா தலைவர் பெருமிதம்

0
104

மு.வ.கலைமணி

பினாங்கு, நவ.12,
கடந்த ஓராண்டு காலத்தில் இழந்திருந்த பல சொத்துகளை ம.இ.கா மீட்டெடுத்துள்ளது என ம.இ.கா பத்து கவான் தொகுதித் தலைவர் சூ.இராமலிங்கம் கூறியுள்ளார்.

தேசிய தலைவரின் சீரிய சிந்தனையில் பல திட்டங்கள் செயல் வடிவம் பெற்று மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. அவரின் பெரும் முயற்சியில் குறுகிய காலத்திலேயெ வெளியில் இருந்து வந்த சில சொத்துகளை ம.இ.காவின் சொத்தாக்கி, ஓர் தலைமைத்துவத்தின் கடமைகளை நிறைவேற்றி, டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சாதனை படைத்துள்ளார் என அவர் பெருமிதம் தெரிவித்தார்.

நாட்டின் பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவிய ம.இ.கா, செத்து விட்டதாக ஏளனமாக பேசிய ஆளுங்கட்சிக்கு சவால் விடும் வண்ணம், இன்று அவரது சிறந்த தலைமைத்துவத்தாலும், நற்பண்புகளாலும் அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவத்தாலும் ஒரு சிறப்புமிக்க கட்சியாக ம.இ.காவை தலைநிமிர வைத்துள்ளார் என தொகுதி ஏற்பாட்டிலான தீபாவளி ஒன்று கூடல் விருந்து நிகழ்வில் அவர் புகழாரம் சூட்டினார்.

பினாங்கு மாநிலத்தை பிரதிநிதித்து அதன் பொருளாளர் ப.ஆறுமுகம் கலந்து சிறப்பித்தார். வரும் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில விருந்து நிகழ்விற்கான ஆயிரம் வெள்ளி கட்டண தொகையை பெற்றுக் கொண்ட மாநில பொருளாளர் நன்றி தெரிவித்த வேளையில் முதல் நிதியாக பத்து கவான் தொகுதி வழங்கியமைக்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

பத்து கவான் கிம் மா உணவகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் தொகுதியிலுள்ள அனைத்து கிளைத் தலைவர்கள், இளைஞர் பகுதியினர், மகளிர் பகுதியினர், பொறுப்பாளர்கள் என திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here