குணாளன் மணியம்
படங்கள் : முகேஸ்வரன், ஹரிஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், நவ.3-
தேசிய ம.இ.காவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கோலாலம்பூர் புத்ரா உலக வாணிபம் மையத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றதாகவும் இதில் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இந்த தீபாவளி உபசரிப்பில் 5 ஆயிரம் கலந்து கொள்வார்கள் என்று மதிப்பிட்டோம். எனினும் இறுதி நேரத்தில் 7 ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டு அனைத்து உணவு வகைகளும் முடிவடைந்து விட்டதாக செய்தியாளர் சந்திப்பில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சொன்னார்.

ம.இ.கா எதிர்க்கட்சியாக இருந்து நடத்தும் முதல் தீபாவளி விருந்துபசரிப்பில் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளது ம.இ.காவிற்கு இருக்கும் ஆதரவை புலப்படுத்துவதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கூறினார்.

இந்த தேசிய ம.இ.கா விருந்துபசரிப்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி, முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின், டத்தோஸ்ரீ மாட் ஹாசான், ம.சீ.ச தலைவர் டத்தோ வீ கா சியோங் உள்ளிட்ட பிரமுகர்கள், ம.இ.கா தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என்று 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

