நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பலவீனம் ம.இ.காவிற்கு பலம்! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

0
282

குணாளன் மணியம்

கோலாலம்பூர், நவ.3-
இந்தியர்கள் விவகாரங்களில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பலவீனமே ம.இ.காவிற்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

தற்போது ம.இ.காவிற்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவு பெருகியுள்ளது. நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பலவீனமே இதற்கு காரணம். அவர்களின் பலவீனம் ம.இ.காவிற்கு பலமாக அமைந்துள்ளது. ஆட்சி அமைத்த ஒன்றரை ஆண்டுகளில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பலவீனத்தை இந்தியர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற தீபாவளி உபசரிப்பில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு சொன்னார்.

ம.இ.காவே இருந்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் தங்கள் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தி வருவதாக புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இந்தியர்கள் மீதான நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பலவீனம் ம.இ.காவிற்கு பலமாக அமைந்துள்ளதால் நாங்கள் மக்கள் ஆதரவை குறிப்பாக இந்திய சமுதாய மக்களின் ஆதரவை பெற்றுள்ளதால் தேசிய முன்னனி ஆட்சி அமைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here