புத்ரா உலக வாணிப மையத்தில் தேசிய ம.இ.காவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு அனைவரும் திரண்டு வாரீர் டத்தோ அசோஜன் அழைப்பு

0
59

கோலாலம்பூர், நவ.1-
தேசிய ம.இ.காவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை புத்ரா உலக வாணிப மையம், துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் மிகவும் சிறப்பான நடைபெறவிருப்பதாக ம.இ.கா தேசிய பொதுச் செயலாளர் டத்தோ அசோஜன் கூறினார்.

இந்த நிகழ்வில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்நிகழ்வுக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலையேற்பார் என்று டத்தோ அசோஜன் தெரிவித்தார்.

இந்த ம.இ.கா தீபாவளி உபசரிப்பு நண்பகல் 12.00 மணி தொடங்கி மாலை 4.00 மணிவரையில் நடைபெறும். இதில் தேசிய முன்னனி, அம்னோ, ம.சீ.சா, பாஸ் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், ம.இ.கா தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்த தீபாவளி உபசரிப்பு மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தீபாவளி உபசரிப்புக்கு வெளிநாட்டு தூதர்கள், வர்த்தர்கள், பொது இயக்கத் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளும் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் உள்ளூர் கலைஞர்கள் பாரம்பரிய ஆடல், பாடல், நடனங்களை வழங்கவுள்ளனர். அதேநேரத்தில் சுவையான உணவுகளும் வழங்கப்படவுள்ளன.

ஆகவே, ம.இ.கா தலைவர்கள், தொண்டர்கள்,பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் டத்தோ அசோஜன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here