மலேசியா மண்ணில் வன்கொடுமை கலாச்சாரமா? மனித உரிமைக்கழகம், வழக்கறிஞர் மன்றம் வாய்மூடி கிடப்பதேன்..? ஐ.பி.எப் உத்தாமா முவீ.மதியழகன் கேள்வி

0
138

மு.வ.கலைமணி

பினாங்கு, நவ 9-
மலேசியத் தமிழர்களை
விடுதலை புலி இயக்க தீவிரவாதிகள்
என போலீசார் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விசாரணை என்ற போர்வையில்
இருட்டுச் சிறையில் அடைத்து
வன்கொடுமை செய்வதாக
அக்குற்றச்சாட்டை எதிர்க்கொண்டுள்ள 12 பேர் கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதை ஒரு சாதாரண விசாரணையாக கருத முடியாது என்று ஐபிஎப் உத்தாமா கட்சியின் தேசியத் தலைவர் முவீ.மதியழகன் கூறியுள்ளார்.

இவ்வழக்கின் வெளிபாடு
நம் நாட்டின் நீதி பரிபாலத்துறையை
உலக அரங்கம் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் கவனித்திட வேண்டும்.

கடுமையான நெருக்குதலில் மனித உரிமைக்கு புறம்பாக பங்கம் ஏற்படுத்தும் கொடுமையான நடவடிக்கைககள்
மீது சுவாகாம்
(SUAKAM) எனும் மலேசிய மனித உரிமைக் கழகம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மதியழகன் கேட்டார்.

மலேசிய நீதிமன்றங்களையும் ,
நீதிபதிகளையும்,
இச்சட்டம் கட்டிப்போடும் விதமாக
சட்ட சாசனத்திற்கு கட்டுப்பபடவிடாது முட்டுக்கட்டையாக இருப்பதை
கடந்த வாரம் நீதிமன்றத்திற்கு வெளியே குற்றச்சாட்டை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞர்கள் வெளிச்சம் போட்டது அதிர்ச்சியை தருகிறது.

உலகின் நீதிபரிபாலத்துறை
குற்றச்சாட்டை எதிர்க்கொள்வோர்க்கு
முன் ஜாமீன் பெறும் உரிமைகள்
இருக்கும் போது,
நம் நாட்டில் கைது செய்து விசாரணை முடிந்தும், ஜாமீன் வழங்கும் உரிமை நீதிபதிகளுக்கு கிடையாது என்பது மனித உரிமை மீறலாகவே உள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.

இப்படியான பல சிக்கல்களை கொண்ட நம்நாட்டின் நீதிமன்றங்களும் நீதிபரிபாலத்துறையும்
தடுமாறுவதை தடுத்து நிறுத்தி நீதிக்கு சுசுதந்திரம் தந்திட வழக்குறைஞர் மன்றம் ஆராய்ந்திட வேண்டாமா?
நீதிக்கு தலைவணங்க இந்த அரசாங்கம் மறுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என மு.வீ.மதியழகன் சூளுரைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here