மேலவைத் தலைவருடன் ஒரு மாலைப் பொழுது விருந்து நிகழ்வு பினாங்கு ம.இ.காவினர் திரண்டு வருக டத்தோ மு.ஞானசேகரன் அழைப்பு

0
26

மு.வ.கலைமணி

பினாங்கு, நவ 28-மேலவைத் தலைவருடன் ஒரு மாலைப் பொழுது விருந்து நிகழ்வு
நாளை நவம்பர் 29ஆம் நாள் இரவு 7.30 மணிக்கு பினாங்கு ,சிட்டி பே வியூ தங்கும் விடுதியில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக பினாங்கு மாநில ம.இ.கா தொடர்பு குழுத் தலைவர் டத்தோ மு.ஞானசேகரன் தெரிவித்தார்.

மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அவர்கள் சிறப்பு வருகைத் தந்து இந்நிகழ்விற்கு தலைமையேற்பார் என அவர் கூறினார்.

நல்நோக்கத்துடன் நடத்தப்படும் இவ்விருந்து நிகழ்வில் கிடைக்கப் பெறும் நிதியைக் கொண்டு கட்டட பராமரிப்பு உட்பட பல நற்செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அவர் மேலும் விவரித்தார்.

தனது செயலவையினர்களின் அயராத ஒத்துழைப்பினாலும் முயற்சியினாலும் இவ்விருந்தின் நோக்கம் நிறைவேறியுள்ளதை அறிந்து தாம் மகிழ்ச்சிக் கொள்வதாக ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான டத்தோ மு.ஞானசேகரன் கூறினார்.

அழைப்பு அட்டைகளைப் பெற்ற ம.இ.காவினரும் பிரமுகர்களும் தவறாது குறித்த நேரத்தில் வருகைத் தந்து நிகழ்விற்கு சிறப்பு சேர்க்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here