மோஜோ புரோஜெக் வழங்கும் எம்ஐஎல்எப்எப் இசைத் திருவிழாவில் கவரும் பாடல்கள் இடம்பெறும் 80,90 பாடல்களையும் ரசிக்கலாம் -சக்தி ஸ்ரீ கோபாலன்

0
73

கோலாலம்பூர், நவ.22-
“நெஞ்சுக்குள்ள உன்னை முடிஞ்சிருக்கேன்” பாடல் வழி லட்சக்கணக்கான மலேசிய ரசிகர்களை கொள்ளை கொண்ட சக்தி ஸ்ரீ கோபால் 80,90களில் வெளிவந்த சிறந்த பாடல்களை
மோஜோ புரோஜெக் எம்ஐஎல்எப்எப் இசைத் திருவிழாவில் வழங்கவிருக்கிறார்.

மலேசியாவில் தனிப்பட்ட முறையில் மோஜோ புரொஜெக் வழி இசைத் திருவிழாவை நடத்தி ஆயிரக்கணக்கான மலேசிய ரசிகர்களை கட்டிப்போட்டது மோஜோ இசைத் திருவிழா என்றால் அது மிகையில்லை.

இந்த மோஜோ இசைத் திருவிழா சக்தி ஸ்ரீ கோபால், நிக்கில் மெத்தியூ, ராஜ்ஜேஸ் வைத்யா, நேஹா மோகன், மலேசிய இசைக் கலைஞர்கள் ஜாகாட் லோரன்ஸ், காஷ்மீர் பாலன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவிருப்பதாக மோஜோ புரொஜெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ரத்னா நடராஜன் தெரிவித்தார்.

மோஜோ புரோஜெக்கின் எம்ஐஎல்எப்எப் மாபெரும் இசைத் திருவிழாவில்
“நெஞ்சுக்குள்ள” சக்தி ஸ்ரீ கோபால் பல பாடல்களை வழங்கவிருக்கிறார். இந்த நிகழ்வில் நான் பாடும் பாடல்கள் ரகசியமானது. ஆனால், கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும் என்று தேசம் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சக்தி ஸ்ரீ கோபாலன் நாங்கள் கேட்டபடி “நெஞ்சுக்புள்ளே” பாடலை பாடி வந்திருந்தவர்களை மகிழ்வித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிக்கில் மெத்தியூ, தமிழ் பாடல்களை குறைவாக பாடியிருந்தாலும் அது குறித்து கவலைப்படவில்லை என்றும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என்றார். நிக்கில் மலையாளப் பாடல்களை அதிகம் பாடியுள்ளார்.

இந்த மோஜோ இசைத் திருவிழாவில் நேகா வேணுகோபால், ஹரிஷ் ஜெயராஜ், ஸ்வேதா மோகன், ராஜேஸ் வைத்தியா ஆகியோரும் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்கவிருக்கின்றனர்.

இதில் ராஜேஸ் வைத்தியா 60 நிமிடங்களில் 60 பாடல்களை தமது இசையில் வழங்கவிருக்கிறார். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. மேலும் மலேசிய கலைஞர்களான காஷ்மீர் பாலன், ஜெகாட் லோரன்ஸ் உள்ளிட்ட பலரும் இந்த இசைத் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.

“நெஞ்சுக்குள்ள” பாடல் வழி லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட சக்தி ஸ்ரீ கோபாலன் 80, 90 களில் வெளிவந்த பாடல்களை வழங்கவுள்ளார். இதில் மேலும் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா பாடல்களும் இடம்பெறும்.

எம்ஐஎல்எப்எப் மாபெரும் கலைவிழா நவம்பர் 23 சனிக்கிழமை மாலை 6.00 மணி தொடங்கி ஸ்டார் எக்‌ஸ்போ, கேடபிள்இயூ கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை ஏர்ஆசியாரெட்டிக்ஸ்.காம் மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது 012-2000505 கைப்பேசி வழி தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here