விடுதலை புலிகள் கைது விவகாரம்! மலேசியத் தமிழர்கள் மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டு -லண்டன் புலம்பெயர் தமிழர்கள் ஆவேசம்!

0
312

லண்டனில் இருந்து தேசம் செய்தியாளர் பிரசாந்த் பாஸ்கரன்

லண்டன், நவ.7-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்ததாக மலேசியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் 12 பேர் மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக லண்டன் தமிழர்கள் ஆவேசமடைந்துள்ளனர்ர்.

மலேசியத் தமிழர்கள் மீது கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பதால் அந்த 12 பேரையும் விடுதலை செய்யுமாறு லண்டனில் உள்ள மலேசிய தூதரகம் முன்றலில் புதன்கிழமை மாலை புலம்பெயர் தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன், மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், கலைமுகிலன் உட்பட12 பேரை விடுதலை செய்யும்படி மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மலேசிய நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத இயக்கமாக கருதுவது முற்றிலும் உண்மைக்கு முரணானது. மாறாக அது ஒரு விடுதலை அமைப்பாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. விடுதலை புலிகள் இயக்கத்தை 2009ஆம் ஆண்டு முற்றாக அழித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் பறைசாற்றுகின்ற போது மலேசியாவில் நடைபெற்ற இந்த கைது நடவடிக்கை வேடிக்கையாக இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் உலகில் எந்த மூலையிலும் தமிழன் எதிர்நோக்குகின்ற அநீதிக்கு தமிழன் குரல் கொடுப்பான் என்ற உணர்விற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here