6 லட்சத்து 40 ஆயிரம் வேலை வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை -அமைச்சர் எம்.குலசேகரன குணாளன் மணியம் நவம்பர் 4, 2019

0
179

கோலாலம்பூர் நவ. 4-
நாட்டில் 6 லட்சத்து 40 ஆயிரம் வேலை வாய்ப்புகள் இருந்தும் இளைஞர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை
என்று அமைச்சர் எம்.குலசேகரன கூறியுள்ளார்.

இந்த 6 லட்சத்து 40 ஆயிரம் வேலைகளும் 3D என்றழைக்கப்படும் ஆபத்து, அழுக்கு, கடினம் நிறைந்த வேலைகளாக இருப்பதால் இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் குலசேகரன் அவ்வாறு தெரிவித்தார்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று வாக்குறுதி வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் எம்.குலசேகரன் உறுதியளித்தார்.

இளைஞர்கள் தற்போது காலியாக இருக்கும் 640,000 வேலைகளில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் வேலையைத் தேர்வு செய்கின்றனர் என்றார் குலசேகரன்.

இந்த வேலைகளில் 21,000 வேலைகள் தொழில் வல்லுனர்களையும் 22,000 வேலைகள் தொழில்நுட்பத்தையும் சார்ந்ததாகும். பசுமை பொருளாதாரத்தின் கீழ் 2 லட்சத்து 50 ஆயிரம் வேலைகள் இருந்தன. ஏற்கனவே 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைகள் நிரப்பப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here