இந்திய இளைஞர்களின் எதிர்காலத் திட்டமிடல் மித்ரா இயக்குநர் ‘ஜிஎம்ஐ’ தலைவருடன் சந்திப்பு

0
13

புத்ராஜெயா, டிச.13-
மித்ரா, இந்திய இளைஞர்களின் குறிப்பாக பி-40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம், அவர்களுக்கான வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு குறித்து அதிக முக்கியத்துவம் செலுத்தி வரும் வேளையில், மித்ரா தலைமை இயக்குநர் ம. மகாலிங்கம் ஜெர்மனிய – மலேசிய நிறுவனத்துடன்(ஜிஎம்ஐ) அண்மையில் ஆலோசனை நடத்தினார்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு பெயர் பெற்ற ஜிஎம்ஐ, மலேசிய-ஜெர்மனிய கூட்டு நிறுவனமாகும். காஜாங், தாமான் யூனிவர்சிட்டியில் அமைந்துள்ள இந்நிறுவனம், மலேசியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பயிற்சித் திட்டங்களையும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும் பேரளவில் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜிஎம்ஐ இன் வியூக திட்டமிடல் மற்றும் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் தலைவரான டாக்டர் ஃபரிட்டுடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, நான்காவது தொழிற்புரட்சி, டிவெட் திறன் பயிற்சி குறித்தெல்லாம் கலந்தாலோசிக்கப்பட்டன.

வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் தான் வின்னும் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பின்போது, மித்ரா-ஜிஎம்ஐ கூட்டு நடவடிக்கை, ஜிஎம்ஐ திட்டங்கள் மற்றும் பயிற்சி, ஜிஎம்ஐ தொழில்நுட்ப மையம், வேலைவாய்ப்பு, ஜிஎம்ஐ குறுகிய காலப் பயிற்சி, ஜிஎம்ஐ 4.0 தொழில் முன்னெடுப்புகள் குறித்தெல்லாம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டதுடன் இந்திய இளைய சமுதாய மேம்பாட்டிற்கான வழிவகை பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக ம.மகாலிங்கம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here