கேமரன் மலை நில விவகாரம் ம.இ.கா, மந்திரி புசாரை சந்திக்கும் -டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன்

0
203

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச.24-கேமரன் மலை விவசாயிகள் நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ம.இ.கா, பகாங் மந்திரி புசார் வான் ரோஸ்டியை சந்திக்கும் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் கூறினார்.

ம.இ.கா மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பில் மாநில மந்திரி புசார் எங்கள் மீது கோபம் கொண்டிக்கலாம். எங்களுக்கு அவர்கள் மீது கோபம் உள்ளது. அது வேறு விஷயம்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் இந்திய விவசாயிகள். அவர்கள் பிரச்சினையை எங்கள் பிரச்சினையாக கருதுகிறோம். ஆகையால், இவ்விவகாரம் தொடர்பில் ம.இ.கா மந்திரி புசார் வான் ரோஸ்டியை விரைவில் சந்தித்து பேச்சு நடத்தும் என்று ம.இ.கா மத்திய செயலவை கூட்டத்திற்குப் பிறகு டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.

இந்த விவகாரத்தில் மாநில மந்திரி புசார் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்து விட்டார். அவர்களுக்கு மாற்று நிலம் வழங்க ஒப்புதல் அளித்திருக்கலாம். ஆனால், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விட்டார்கள். இதனால் நாங்கள் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் பதவியில் இருந்து என்ன பிரயோஜனம்? இதன் காரணமாகவே ம.இ.கா ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மந்திரி புசார் அதிகாரி ஆகிய பதவிகளை ராஜினா செய்துள்ளதாக என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இந்த கேமரன் மலை விவகாரம் தொடர்பில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் ம.இ.கா தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் திட்டவட்டமாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here