சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாராவை நான் மிரட்டவில்லை -பத்மராஜன் விளக்கம்

0
444

கோலாலம்பூர், டிச.17-
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாராவை தாம் மிரட்டவில்லை என்று கைது செய்யப்பட்டுள்ள பத்மராஜன் விளக்களித்துள்ளார்.

நான் அவரை மிரட்டவில்லை. மாறாக மக்கள் பார்லிமண் வாட்ஸ்ஆப் புலனத்தில் இணைக்கப்பட்ட அவரிடம் பணமிருந்தால் தேவைபடுபவர்களுக்கு உதவுகள் என்றுதான் கூறினேன் என்று காஜாங் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ள பத்மராஜன் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் இருக்கும் சொத்து விவரங்களை வெளியிட்டால் குடும்பத்தினருக்கு ஆபத்து. அதனால் தேர்தலுக்கு முன்பு குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டதாகவும் நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கழித்து குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தில் அவர்கள் தொடர்ந்து வெளிநாட்டில் இருக்க தாமும் மனைவியும் முடிவு செய்து விட்டதாகவும் மலேசியா கினி டிசம்பர் 10ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்த செய்திக்காகவே நண்பர் ஒருவருக்கு உதவும்படி அப்புலனத்தில் எட்மண்ட் சந்தாராவை தாம் கேட்டுக் கொண்டதாக பத்மராஜன் சொன்னார்.

பணமிருந்தால் மற்றவர்களுக்கு உதவுங்கள் என்று நான் அவரிடம் கேள்வி கேட்டது உண்மைதான். பலமுறை கேள்வி கேட்டேன். ஆனால், அது அவரை மிரட்டுவதற்காக இல்லை. ஆனால் எட்மண்ட் சந்தாரா அதனை தவறாகப் புரிந்து கொண்டு நான் அவரை மிரட்டியதாக காவல்துறையில் புகார் செய்துள்ளார் என்று சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் பத்மராஜன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள
பத்மராஜன் ஜொகூரில் இருந்து கோலாலம்பூர் கொண்டு வரப்படும் போது அவர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளானதால் பத்மராஜன் முதுகுபகுதியில் காயமடைந்த நிலையில் வேறு ஒரு காவல்துறை வாகனம் மூலம் பத்மராஜன் காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பத்மராஜன் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்து எங்கு, எப்படி நடந்தது என்று தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தார்களா என்றும் தெரியவில்லை. பத்மராஜன் ஏற்கெனவே விபத்தில் முதுகு பகுதியில் காயமைந்து இரும்பு தகடு வைத்துள்ளார். இவ்விபத்தில் மீண்டும் அதே இடத்தில் அடிபட்டதால் பத்மராஜன் நடக்க முடியாமல் தவித்து வருவதாக அவரது நண்பர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here