மணிலா சீ போட்டி வெற்றியாளர்களுக்கு வரவேற்பு

0
7

  • பொன். வேதமூர்த்தி

புத்ராஜெயா, டிச.11-
‘ஓன்றாக வெல்வோம்’ என்னும் கருப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடங்கிய சீ விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளுடன் நாடு திரும்பும் மலேசியக் குழுவினருக்கு பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்காசிய நாடுகளுக்கிடையே நவம்பர் 30- ஆம் நாள் தொடங்கிய இந்த மண்டல விளையாட்டுப் போட்டியில் 70 தங்கப் பதக்கங்களுக்கு இலக்கு வைத்து மணிலா சென்ற மலேசியக் குழுவினர் 55 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாலும் அடுத்தடுத்தப் போட்டிகளில் இன்னும் முனைப்பு காட்டினால் இலக்கை எட்ட முடியும் என்று வேதமூர்த்தி கூறினார்.

மலேசியக் குழுவில் இடம்பெற்று கராத்தே வழி தங்கப் பதக்கங்களை வாகை சூடிய வீரர் பிரேம்குமார், வீராங்கணை மாதுரி, பூப்பந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற கிஷோனா, உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற நவ்ராஜ் சிங், கராத்தே குமிட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மதிவதனி முருகேசன் உட்பட பதக்கம் வென்ற அனைரையும் மலேசிய முற்போக்குக் கட்சித் தலைவருமான பொன்.வேதமூர்த்தி பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here