மலேசியர்கள் மாறுப்பட்ட கருத்துகளை களைந்து, நம்பிக்கையும் சமாதானமும் கொண்ட புதிய சமுதாயமாக இருப்போம் மனிதவள அமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

0
32

கோலாலம்பூர், ஜன.1
மலேசியர்கள் மாறுப்பட்டிருக்கும் கருத்துகளை களைந்து, நம்பிக்கையும் சமாதானமும் கொண்ட புதிய சமுதாயமாக ஒன்றுபடுவோம் என்று
மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்புத்தாண்டு புதிய விடியல் மற்றும் புதிய எண்ணங்கள் உருவாக துணை புரியட்டும். இந்த புதிய ஆண்டு மலேசிய மக்களுக்கு மகிழ்ச்சி, இன்பம், அன்பு, ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைந்திருக்க இறைவனை பிரார்த்தித்து 2019-ஆம் ஆண்டுக்கு நன்றியுடன் விடைகொடுத்து 2020 ஆண்டை குதூகலத்துடன் வரவேற்க வேண்டும் என்று அமைச்சர் குலசேகரன் தெரிவித்தார்.

இந்த புத்தாண்டில் புதிய விடியலின் மூலம் புதிய எண்ணங்கள் உள்ளத்தில் ஆக்கிரமிக்கச் செயது ஒளிமயமான வாழ்வை அமைத்துக் கொள்வோம். பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் மக்களின் உரிமைகள், மனித நேயம், சுதந்திரம் மற்றும் அனைவரின் நல்வாழ்வையும் மதித்து பாதுகாத்து பிளவுபடாத ஒரு நாடாக மலேசியா முன் வர வேண்டும்.

ஒரு நாட்டின் பல்லின மக்களின் இன, மொழி, சமய கலாச்சார மற்றும் ஏனைய தனித்துவமான பண்புகளை மதிப்பதன் மூலம் ஏற்படுகின்ற ஒற்றுமையை பேணுவதன் மூலமே ஒரு வளம்மிக்க நாட்டை கட்டியெழுப்ப முடியும். நிலையான சமாதானத்தையும், புரிந்துணர்வையும் நிலைநாட்டி அனைத்து குடிமக்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி 2020 ஆம் ஆண்டை சிறப்பான ஆண்டாக மாற்ற வேண்டும்.

புதிய எதிர்பார்ப்புக்களை கொண்டு வந்திருக்கும் இப்புதிய ஆண்டில், மலேசிய மக்கள் அனைவருக்கும் இது ஒரு வளம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய மனிதவள அமைச்சர்
மாண்புமிகு எம். குலசேகரன் தமது புத்தாண்டு
நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here