மலேசியாவில் சமநீதி,சமத்துவத்தை கடைபிடியுங்கள் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் வலியுறுத்து

0
423

கோலாலும்பூர், டிச. 28- மலேசியாவில் சமநீதியையும் சமத்துவத்தையும் கடைபிடிக்கும்படி துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வரும் துன் மகாதீர் மற்றும் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி அடி அவாங் இருவரும் மலேசியாவில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத்தின் நோக்கத்தை இருவரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து விருப்பத்திற்கு அச்சட்டம் குறித்து தெரியாமல் விமர்ச்சனம் செய்யக் கூடாது என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.

மலேசியாவில் ஜனநாயகம் இல்லை என்று கருதும் உலக நாடுகள் நமது உள்விவகாரங்களில் தலையிட்டால் எப்படி இருக்கும்? பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வது தவறு என்று துன் மகாதீருக்கு தெரியாதா என்று விக்னேஷ்வரன் கேட்டார்.

உலக நாடுகள் சிலவற்றில் பல்வேறு குற்றங்களுக்காக நுழையத் தடை விதிக்கப்பட்டிக்கும் இந்தியாவால் தேடப்படட்டு வரும் மதப் போதகர் ஸாகிர் நாயிக்கிற்கு அடைக்கலமும், நிரந்தர குடியுரிமையும் வழங்கிய நமது அரசாங்கத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது ஜாவி இஸ்லாமிய எழுத்துக்கலை ஆரம்ப தேசியப் பள்ளி, தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளிகளில் மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த ஜாவி மொழி முஸ்லீம் அல்லாதாருக்கு ஏன் போதிக்க வேண்டும்? இதன் உள்நோக்கம்? இதனை கற்று அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

இந்நிலைமை இந்தியாவின் குடியுரிமை சட்டத்திருத்தம் முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கின்றது என்று துன் மகாதீர், ஹாஜி அவாங் கண்டிக்கின்றனர். இது நியாயமா? பல்லின மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் மலேசியாவில் கருத்து சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். சமநிதி, சமத்துவம் கடைபிடிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here