ஆஸ்ட்ரோவில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

0
25

ஆஸ்ட்ரோவுடன் இணைந்து பொங்கல் திருநாளைக் கொண்டாடும் விதமாக இன்று ஜனவரி 15 தொடங்கி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஆஸ்ட்ரோ கோ ஆன் டிமான்ட் மற்றும் வானொலி வாயிலாக பார்த்து கேட்டு மகிழலாம்.

மலேசிய மற்றும் இந்திய நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். இதில் ரசிக்க ருசிக்க பொங்கல் சிறப்பு, அட்டா பொங்கல், பாட்டி மற்றும் டினேஷுடன் பொங்கல், மற்றும் ஹிட் திரைப்படமான என்ஜிகே போன்ற அற்புதமான நிகழ்ச்சிகளை விண்மீன் எச்டி அலைவரிசை 231இல் கண்டு மகிழலாம்.

நாட்டின் புகழ்ப்பெற்ற பேச்சாளர் டாக்டர் காதர் இப்ராஹிம் “நம் வாழ்க்கை நம் கையில்” எனும் தலைப்பில் தன்முனைப்பு உரையை வழங்கவிருக்கிறார். அதேநேரத்தில் உள்ளூர் கலைஞர்களின் பங்கேற்பில் நையாண்டி பொங்கல் நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201இல் கண்டு களிக்கலாம்.

பொங்கல் சிறப்பு திரைப்படங்களான பிளாக்பாஸ்டர் வெற்றி திரைப்படங்களான பிகில், நம்ம வீட்டுப் பிள்ளை, சங்கத்தமிழன், விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படங்கள் ஒளியேறும்சன் டிவியிலும் ( அலைவரிசை 211/எச்டி அலைவரிசை 234, அசுரன் மற்றும் கைதி திரைப்படங்களை விஜய் தொலைக்காட்சியிலும் (அலைவரிசை 224), எச்டி அலைவரிசை 232 மற்றும் ஆஸ்ட்ரோ பாக்ஸ் ஆப்பிஸ் தங்கத்திரையில் (அலைவரிசை 241) அதிரடி-குற்றம்-திரில்லர் நிறைந்த காளிதாஸ் போன்ற திரைக்கு வந்து சில மாதங்களேயான திரைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் முதல் நிலை தமிழ் வானொலியான ராகாவிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here