இண்டா அட்லாயர் நிறுவனத்தின் பாத்திக் துணி விளம்பரத் தூதராக ராஜேஸ் வைத்தியா நியமனம் தலைமை நிர்வாக அதிகாரி மதுமதி மாணிக்கவாசகர் பிள்ளை தகவல்

0
8

இண்டா அட்லாயர் நிறுவனத்தின் பாத்திக் துணி
விளம்பரத் தூதராக ராஜேஸ் வைத்தியா நியமனம்
தலைமை நிர்வாக அதிகாரி மதுமதி மாணிக்கவாசகர் பிள்ளை தகவல்

குணாளன் மணியம்

வீணை இசை வல்லுனநரான ராஜேஸ் வைத்தியா, பல நாடுகளில் வீணை இசைக் கச்சேரியை நடத்தவிருக்கிறார். இந்தக் கச்சேரிகள் நடக்கும் போது தனக்கென்று ஒரு ஆடையை வடிவமைக்கும் எண்ணத்தில் இருந்த ராஜேஸ் வைத்தியாவிடம் மலேசிய பாத்திக் சட்டைகள் குறித்து பேச்சு நடத்தி, அதனை பிரபலப்படுத்த முடிவு செய்ததாகவும் இதற்காக அவரை விளம்பரத் தூதராக நியமித்ததாகவும் செய்தியாளர் சந்திப்பில் மதுமதி தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஜன.11- மலேசியாவின் பாத்திக் தொழில்துறையை ஊக்குவிக்கும் நோக்கத்தில்
இண்டா அட்லாயர் நிறுவனத்தின் பாத்திக் துணி விளம்பரத் தூதராக பிரபல வீணை இசையமைப்பாளர் ராஜேஸ் வைத்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதன்
தலைமை நிர்வாக அதிகாரி மதுமதி மாணிக்கவாசகர் பிள்ளை கூறினார்.

மலேசியாவில் பாத்திக் துணி தொழில் துறையில் இந்தியர்கள் பங்கு மிகவும் குறைவு. மலாய்க்காரர்கள் ஆதிக்கம் நிறைந்த பாத்திக் துறையில் இந்திய இளைஞர்களை ஈடுபடச் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்காக மித்ராவுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் மதுமதி சொன்னார்.

மோயில் குருப் குழுமத்தின் துணை நிறுவனமான இண்டா அட்லாயர் பாத்திக் தொழில்துறையை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. “மலேசிய இன் 100 மீட்டர் பாத்திக் பாயிண்டிலிசம்” திட்டத்தை அண்மையில் அமல்படுத்தியது. இத்திட்டம் பாத்திக் தொழில் துறையை உலகளாவிய நிலைக்குக் கொண்டு செல்ல ஒரு பாலமாக அமையும் என்று மதுமதி குறிப்பிட்டுள்ளார்.

இண்டா அட்லாயர் நிறுவனம் தங்களின் பாத்திக் துணி தயாரிப்புகளை துபாய், லண்டன், இத்தாலி, மெசீர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யவிருப்பதாகவும் மதுமதி சொன்னார்.

ராஜேஸ் வைத்தியா மலேசிய தேசிய கீதத்தை வீணையில் இசைத்து சாதனை படைத்துள்ளார். இது மலேசியர்களின் கவனத்தை ஈர்த்திருந்ததது. ராஜேஸ் வைத்தியா உலகநாடுகளில் நடத்தும் வீணை இசைக் கச்சேரியில் இண்டா அட்லாயர் தயாரிப்பிலான பாத்திக் சட்டைகளை அணிந்து அதனை விளம்பரப்படுத்தவுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ராஜேஸ் வைத்தியா தேசிய கீதம் பாடலை வீணையில் இசைத்தார். மேலும் சில பாடல்களை வீணையில் மீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here