கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் ராஜினாமா?

0
403

கோலாலம்பூர், ஜன.2.
கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தமது கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கல்வி அமைச்சின் வட்டாரம் ஒன்று கூறியது.

ஒரு இஸ்லாமிய விரிவுரையாளரான மஸ்லீ, இன்று பிற்பகல் பிரதமர் துன் மகாதீரை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை வழங்கி விட்டதாகும் அதனை பிரதமர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டுகிறது.

இது தொடர்பில் மஸ்லீ பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவிருப்பதாகவும் இந்நிலையில் பிரதமர் துன் மகாதீர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here