காந்தியும் வள்ளலாரும் இரு துருவங்கள் -அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

0
14

புத்ராஜெயா, ஜன.30-
உண்ணாநிலைப் போராட்டத்தையும் அகிம்சைக் கொள்கையையும் பயன்படுத்தி வெற்றி கண்ட மகாத்மா காந்தி அரசியல் துறையிலும் அருள்வடிவான பரம்பொருளை சோதி உருவில் வணங்குவதும் நலிந்தோர் நலம்நாடுதலும் ஒன்றெனப் பாடிய அருள்மிகு வள்ளலார் சுவாமிகள் ஆன்மிகத் துறையிலும் துருவங்களாக விளங்கிய மேலோர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பகவத் கீதையிலும் சமண சமயக் கொள்கையிலும் ஈடுபாடு கொண்ட காந்தி அடிகள் டால்ஸ்டாய் மேதையின் எழுத்துகளிலும் ஆர்வம் காட்டினார். திருக்குறளை அசலாகப் படிக்க தமிழனாகப் பிறக்க ஆசைப்பட்ட காந்தி அவர்களுக்கு மகாத்மா என்னும் திருநாமத்தை வழங்கியவர் இலக்கிய மேதை இரவீந்திர நாத தாகூர்.

மலாயா விடுதலைக்கு மட்டுமல்ல; ஏராளமான நாடுகளின் விடுதலை வேட்கைக்கும் உரமும் ஊக்கமும் அளித்த இந்திய விடுதலைக்காக 17 தடவை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட காந்தி அவர்களின் நினைவு நாளான இன்று ஜனவரி 30ஆம் நாள் அவரை நினைவுகூர்வோம்.

அதைப்போல ஆன்மிக நெறியில் சிர்திருத்த சிந்தனையை முன்-மொழிந்ததுடன் பசிப்பிணி தீர்க்க அணையா அடுப்புடன் மடப்பள்ளியைத் திறந்த கருணை வள்ளல் அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளும் இதே நாளில் இந்த உலக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சோதியுடன் கலந்து சோதி வடிவானார்.

வாடிய பயிரைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமல் மனம் இரங்கிய வள்ளலார் சுவாமிகளையும் அவர் வகுத்த உயிர் கொள்ளாமை கொள்கையையும் அவரின் நினைவு நாளில் சிந்தனையில் கொள்வோம் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here