தண்ணீரைப் போன்று ஒன்றுபட்டு திகழ்வோம் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சீனப் புத்தாண்டு நல்வாழ்த்து

0
36

புத்ராஜெயா, ஜன 25-
மலரும் எலி ஆண்டில் நற்சிந்தனை, ஆற்றல், சகிப்புத்தன்மை, வலிமை ஆகியவற்றின் துணை கொண்டு நல்லிணக்க சமுதாயமாக விளங்க வேண்டும் என்று தமது சீனப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் துறை பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

சீன நாட்காட்டியின் மூலமாக(இராசி) வகைப்படுத்தப்பட்டுள்ள தண்ணீர், மலேசியர்கள் தங்களின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு பொருத்தமான ஒரு சான்றாகும்.

தண்ணீர், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தக அமைத்துக் கொள்வதைப் போல ஒரு தற்காப்புக் கலைஞர் விளங்க வேண்டும் என்று புரூஸ் லீ குறிப்பிட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.
குளிர்நிலையை அடையும்போது திடமாக மாறும் தண்ணீர், மறுபக்கம் சுவை பானமாகவும் மாறுகிறது. மிக முக்கியமாக, ஒரு பெரிய ஏரியில் சூழ்ந்துள்ள நீரில் அமைதியும், அதன் அலைகளில் மகத்தான வலிமையும் உள்ளன.

நம்முடைய நல்லிணக்க சமுதாயத்திற்கு ஊறு விளைவிக்கும் வெளிக்கூறுகளை புறந்தள்ளும் ஆற்றலை இந்த சீனப் புத்தாண்டு வேளையில் நாம் கைக்கொள்ள வேண்டும்.
மலேசியர்களாகிய நம் வலிமை, நாம் தண்ணீராக நாம் மாறும்பொழுது இன்னும் வலுப்பெறுகிறது.

வண்ண மலர்த் தோட்டத்தைப் போன்ற மலேசியக் கூட்டு சமுதாயத்தில் சீனப் புத்தாண்டு தினமும் தேசிய தினமாக அனுசரிக்கப்படும் பாரம்பரியம் தொடர்கின்ற வேளையில் இந்த 2020 சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தையும் வழக்கமான உற்சாகத்துட-னும் ஒருமைப்பாட்டு உணர்வுடனும் கொண்டாடி நல்லிணக்க சமுதாயத்தை நிலைநாட்டுவோம் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here