தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி பொன்.வேதமூர்த்தி தலைமையில் அரசுசாரா இயக்கங்கள் கருத்திணக்கம்

0
239

புத்ராஜெயா, ஜன. 07-
தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி மொழி அறிமுகம் குறித்து கருத்திணக்கம் எட்டப்படும். அதற்கு ஏதுவாக, தேசிய அளவில் பன்முக கருத்துப் பரிமாற்றக் கூட்டங்கள் பல கட்டங்களில் நடத்தப்பட்டு அனைவரும் ஏற்கத்தக்க வகையில் சுமூகமான முறையில் ஒருமித்த முடிவு காணப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் 32 அரசுசாரா இயக்கங்கள் கருத்திணக்கம் கண்டன.

தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி மொழி அறிமுகம் குறித்து நாடு முழுக்க மாற்றுக் கருத்துகள் பல்லூடக தகவல் சாதனங்களில் அண்மைக் காலமாக வெளியிடப்படும் சூழலில், இந்த நிலை நாட்டில் காலங்காலமாக பேணப்படும் சமூக நல்லிணக்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் அளவிற்கு செல்லக்கூடாதென்பதை உணர்ந்த தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்த இந்த 32 சமூக அமைப்புகளின் சார்பில் மலாய், சீன, இந்திய சமூகங்கள் மற்றும் சபா-சரவாக் மாநிலங்களையும் பிரதிநிதித்து 45 பேர் கலந்து கொண்டு அனைவரும் நாட்டு நலனையும் சமூக ஒற்றுமையையும் இளம் மாணவர்களின் நலனையும் முன்னிலைப்படுத்தி ஒருமுகமாக கருத்து தெரிவித்தனர்.

இதில் நிறைவாக, இதன் தொடர்பில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாட்டில் உள்ள தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி மொழி அறிமுகம் குறித்து அனைவருக்கும் ஏதுவான முடிவு எட்டப்படும் என்றும் அதற்கிசைவாக இன்னும் பல கருத்துப் பரிமாற்றக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் 32 அமைப்புகளின் சார்பில் பேராசிரியர் அவாங் சாரியான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here