பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு உழைக்கும் மக்களுக்கான பெருநாளைக் கொண்டாடுவோம் நியோஷ் குணசேகரன் கந்தசுவாமி பொங்கல் வாழ்த்து

0
11

கோலாலம்பூர், ஜன.14-
உழவர் திருநாளாம் பொங்கல் பெருநாளை இன,சமய வேறுபாடின்றி உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். இவ்வேளையில் மலேசிய மக்கள் அனைவருக்கும் நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் சூரியப் பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு மனிதனும் இயற்கைக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.

உழவுத் தொழிலுக்கு வந்தனம் செய்வோம் என உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் உழவுத் தொழிலைப் போற்றும் விழாவாக பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. இந்நாளில் உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதையும் நன்றியும் செலுத்தும் பொருட்டு பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளாகவும் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

உழவுத் தொழிலைப் போற்றும் இவ்வேளையில், குடும்ப மேன்மையினை நோக்கமாக கொண்டு பல்வேறு பணிகளைப் புரியும் அனைவரும் எல்லா நிலையிலும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிச் செய்ய வேண்டும். அனைத்து இடங்களிலும் குறிப்பாகப் வேலையிடத்தில் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் விபத்துகளைத் தடுக்கலாம்.

தேசிய வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகம் (NIOSH) அன்றாட பணிச் செயல்முறையில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை முதன்மைப்படுத்துவதை உறுதிசெய்யும் பொறுப்பினை எப்போதுமே தனது இலக்கான கொண்டுள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கு அவர்களது வேலையில் போதுமான பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்வதன் வழி வேலையிடத்தில் விபத்துகளைத் தடுக்க முடியும் எனவும் கூறுகிறார் தேசிய வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகம் (NIOSH)-த்தின் துணைத்தலைவர் குணசேகரன் கந்தசுவாமி.

மேலும், தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழி வாழ்க்கையின் நம்பிக்கையைக் குறிக்கின்றது. செழிப்பான தை மாதம் அனைவரது வாழ்விலும் செழிப்பான காலத்தைக் கொண்டு வரும் என்பதும் நம்பிக்கை.

எனவே நாட்டு மக்கள் அனைவரது இடர்களும் நீங்கி நல்வழி பிறக்கும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். உலகெங்கும் வாழும் பெருமக்கள் அனைவரும் உவகையுடன் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாள் வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடி மகிழ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் (NIOSH)-இன் துணைத்தலைவர் குணசேகரன் கந்தசுவாமி மீண்டும் தமது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here