பினாங்கு அரசியல் தலைவர் ஒருவரை களங்கப்படுத்தும் விவகாரத்தில் என்னை சம்பந்தப்படுத்துவதா? டத்தோ மு.ஞானசேகரன் காவல்துறையில் புகார்

0
62

மு.வ.கலைமணி

பினாங்கு, ஜன.1-
பினாங்கு மாநில அரசியல் தலைவர் ஒருவரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் வெளிவந்துள்ள புகைப்பட காட்சிகள் அடங்கிய ஒரு செய்தி விவகாரத்தில் தம்மை சம்பந்தப்படுத்திய விவகாரம் தொடர்பில் டத்தோ மு.ஞானசேகரன் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

அந்த புகைப்படக் காட்சிகள் அடங்கிய செய்தி வாட்ஸ்ஆப் புலனத்தில் பரவலாக பரவி வருகிறது.
அந்த புகைப்படக் காட்சிக்கு நடுவில்
என் பெயரையும் நிழல்படத்தையும் வெளியிட்டு தன்னை சம்பந்தப்படுத்தியது ஏன் என பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ மு.ஞானசேகரன் வினவினார்.

சில அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சியின் உச்சக் கட்டம் இதுவென கூறிய அவர், இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் இது தொடர்பில் தாம் காவல்துறையில் புகார் செய்துள்ளதாகவும் டத்தோ ஞானசேகரன் தெரிவித்தார்.

நம் பண்பாட்டிற்கும் கலாச்சார சீரழிவிற்கும் பல விதமான யுக்திகளை கையாண்டு பொய் தகவல்களை பரப்பி வரும் சில நபர்களின் செய்கையினால் தாம் தர்மசங்கடத்திற்கு ஆளாகியதாகவும் இதன் காரணமாகவே தாம் இதுதொடர்பில் உடனே காவல்துறையில் புகார் செய்துள்ளதாகவும் கூறிய அவர் சம்பந்தப்பட்ட புலன அன்பர்களின் தொலைப்பேசி எண்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவுடடத்தோ ஞானசேகரன் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here