பினாங்கு மாநில சத்ரியன் சோப்பர்ஸ் தன்னார்வ இயக்கம் மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு பள்ளி உபகரணப் பொருட்களை வழங்கியது.

0
72

மு.வ.கலைமணி

பினாங்கு ஜன.25- பினாங்கு மாநில சத்ரியன் சோப்பர்ஸ் (Sattrian Chopper’z) தன்னார்வ இயக்கமானது, பெங்காலான் ஹூலுவில் உள்ள குரோ தமிழ்ப் பள்ளி, கிரீக் தமிழ்ப் பள்ளி மற்றும் கோத்தா லீமா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடை, காலணி, புத்தகப்பை மற்றும் பள்ளி தடவாள பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியது.

இந்நிகழ்வு சத்ரியன் சோப்பர்ஸ் இயக்கத்தின் தலைவர் செல்வராஜன் இராமன் தலைமையில் நடைப்பெற்றது.

மூன்று தமிழ்ப் பள்ளிகளையும் உள்ளடக்கிய சுமார் 100 மாணவர்களுக்கு இந்த இலவச உதவிகள் வழங்கப்பட்டன.

சத்ரியன் சோப்பர்ஸ் உறுப்பினர்கள் அனைவரது அயரா முயற்சியின் பயனாக இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடந்ததாக செல்வராஜன் பெருமிதத்துடன் கூறினார்.

பேராவிலுள்ள மூன்று தமிழ்ப் பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளுக்கு உதவிடும் வகையில் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு, வெற்றிகரமாக இந்நிகழ்வை நடத்தி முடித்ததாக அவர் மனமகிழ்ந்தார்.

சத்ரியன் சோப்பர்ஸ் இயக்கம் ஒவ்வொரு வருடமும் பல சமூக சேவைகளை செய்து வருகிறது என்றார். பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் வழங்குவது அவற்றில் ஒன்று. இதன் மூலம் வசதி குறைந்த மாணவர்களின் பெற்றோர்களின் சுமையை குறைப்பதே தமது இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.

இந்த சேவை ஒவ்வொரு வருடமும் தொடரும் என்று கூறிய அவர்,
ஒத்துழைப்பு வழங்கிய மூன்று தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகங்களுக்கும் சத்ரியன் சோப்பர்ஸ் தன்னார்வ இயக்கத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here