மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டிக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 11 சனிக்கிழமை ஆஸ்ட்ரோவில் நடைபெறும்

0
4

கோலாலம்பூர், ஜன.10-
மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டிக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 11 காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணிவரையில் புக்கிட் ஜாலில் ஆஸ்ட்ரோவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தமிழ் ராப் நேர்முகத் தேர்வில் 18 முதல் 28 வயதுக்குட்பட்ட அனனத்து
மலேசியர்களும் ஆஸ்ட்ரோ உலகம் பிரத்தியேகமாக வழங்கும் மலேசியாவின்
முதல் தமிழ் ராப் போட்டியின் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

நீங்கள் ஒரு ராப்பராக மகுடம் சூட்ட வேண்டும் என்பதோடு நீங்கள் ஒரு இசைத்தாளத்தை இசைக்கும் போது மக்கள் கூட்டம் உங்களை சூழ்ந்து ஆரவாரத்தோடு உங்களை உற்சாகப்படுத்துவதை நீங்கள் விரும்பினால் தமிழ் ராப் போட்டி நேர்முகத் தேர்வில் பங்கேற்க இதுவொரு அரிய வாய்ப்பாகும்.

இந்த தமிழ் ராப் நேர்முகத் தேர்வில் நீங்கள் பங்கேற்று உங்கள் திறமையை வெளிக்கொணர இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நேர்முகத் தேர்வின் போது வழங்கப்படும் மூன்று இசைப் பதிவில் ஒன்றை தேர்வு செய்து ஒரு நிமிடத்திற்கு ராப் செய்ய வேண்டும்.

இந்த நேர்முகத் தேர்வில் 16 தமிழ் ராப் திறனாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பல நீக்கங்கள் உள்ளடக்கியிருக்கும் போர் சுற்றுக்குள் சென்று பார்வையாளர்கள் வாக்குகள் மூலம் அடுத்த நிலைக்கு செல்லும் வாய்ப்பினை பெறுவார்கள். அதன் பிறகு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள்.

இந்தப் போட்டியின் முதல் நிலை வெற்றியாளருக்கு 5 ஆயிரம் வெள்ளி மற்றும் சோனி மியூசிக் இசை நிறுவனத்துடன் இணைந்து முதல் தனி ஆல்பம் வெளியிடும் வாய்ப்பை பரிசாக பெறுவர். அதேநேரத்தில் இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 2,000 வெள்ளி பரிசு பணமும் சோனி மியூசிக் இசை நிறுவனத்துடன் இணைந்து அவர் சுயவிருப்பத்தை பொறுத்து முதல் தனி ஆல்பம் வெளியிடும் வாய்ப்பும் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள்
www.astroulagam.com.my/RapPorkalam எனும் அகப்பக்கத்தை வலம்
வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here