ரசிகர்கள் திகில் படத்தை விரும்புவதன் விளைவுதான் “டெவில்ஸ் நைட்” ஆங்கில திரைப்படம் -தமிழ்நாட்டு தயாரிப்பாளர் டெல் கே.கணேசன்

0
30

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜன.21-
ரசிகர்கள் திகில் படத்தை விரும்புவதன் விளைவுதான் “டெவில்ஸ் நைட்” ஆங்கில ஹாலிவுட் திரைப்படத்தை தயாரித்துள்ளதாக தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மேற்கத்திய நாட்டின் தொழிலதிபரும், தமிழருமான டெல் கே.கணேசன் கூறினார்.

திரைப்படத் தயாரிப்புத் துறையில் பல விருதுகளை பெற்றுள்ள டெல் கே.கணேசன் முதல் படைப்பான “டெவில்ஸ் நைட்” ஹாலிவூட் ஆங்கில திரைப்படத்தை ஷாம் லோகன் இயக்கியுள்ளார். இத்தகைய மர்மம், திகில் நிறைந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருவதால் இப் படத்தை தயாரித்துள்ளதாக கணேசன் சொன்னார்.

இந்த “டெவில்ஸ் நைட்” ஆங்கில ஹாலிவுட் திரைப்படம் பழைமை வாய்ந்த ஒரு கத்தி, ராட்சத மிருகம் ஆகியவற்றை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் ஆண்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று காவல் துறை புலன் விசாரணையில் இறங்கிய சமயத்தில் மர்ம கத்தி, மர்ம மனித மிருகம் அதனை செய்வது தெரியவருகிறது.

காவல் துறை இதனை முதலில் நம்ப மறுத்தாலும் மர்ம மிருகத்தையும் கத்தியையும் பார்த்த நேரடியாக பார்த்த பிறகு அதனை அழிக்கும் முயற்சியில் இறங்குவதுதான் கதைச்சுருக்கம். இத்திகில் ஹாலிவுட் ஆங்கில திரைபடத்தில், தென்னிந்திய சினிமா நடிகர் நெப்போலியன் முக்கியக் காதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

டெவில்ஸ் நைட் திரைப்படம் வரும் மே மாதம் ஐரோப்பிய நாடுகளிலும் பிறகு மற்ற நாடுகளிலும் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மலேசிய ரசிகர்கள் இந்த ஹாலிவுட் திரைப்படத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோலாலம்பூர், கொலிசியம் திரையரங்கில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இந்த “டெவில்ஸ் நைட்” திரைப்படத்தை மலேசிய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இங்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. மலேசிய ரசிகர்கள், குறிப்பாக தமிழர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு மலேசியா வந்துள்ளதாக கணேசன் தெரிவித்தார்.

மலேசியாவில் பல திறமை வாய்ந்த தமிழ் கலைஞர்கள் குறிப்பாக நடிகர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆகையால், மலேசியத் திரைப்படத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கணேசன் குறிப்பிட்டார்.

இந்த “டெவில்ஸ் நைட்” ஆங்கில திரைப்படத்தில் நாதன் கேனி மாதர்ஸ், ஜெசி ஜென்சன் முக்கிய கதாதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here