வினாத்தாளில் ஜாகீர் நாயக்கை உயர்ந்த மனிதராக சித்தரிக்கும் கேள்வி துணை வேந்தர் விளக்கத்தில் அதிருப்தி

0
10

கோலாலம்பூர், ஜன.6-
உலக நாடுகளால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் தொடர்பான பல்கலைக்கழக வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்வி விதிமுறைகளுக்கு உட்பட்டு கேட்கப்பட்டுள்ளதாக பெர்லீஸ் மலேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் பல்டிஷா அகமட் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று இந்திய சமுதாய மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் ஒருவரை உயர்ந்த மனிதர் போல் காட்டுவது சித்தரித்து கேள்வி கேட்பது அவரையும் அவரது நடவடிக்கைகளையும் ஆதரிப்பதற்கு சமமாகும் என்று இந்திய மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜாகீர் நாயக் ஒரு இந்திய பிரஜை. அங்கு பண மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வரும் ஜாகீர் தொடர்பான கேள்வி விதிமுறைகளுக்கு உட்பட்டு கேட்கப்பட்டுள்ளது என்று ஒரு துணை வேந்தர் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று இந்திய சமுதாய மக்கள் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

ஜாகீர் நாயக் தொடர்பான அந்த கேள்வி பாட திட்டத்திற்கு அப்பாற்பட்டு கேட்கப்பட்டுள்ளதாகவும் சிறுபான்மை இன உறவு சவால்கள் மற்றும் அண்மைய நிலவரங்கள் அடிப்படையில் அக்கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் பட்லிஷா அகமட் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here