ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெள்ளிரதம், தங்கரதம் தண்ணீர்மலை திருத்தலம் நோக்கி பவனி சீன பக்தர்களின் தேங்காய் உடைப்பு அதிகரிப்பு

0
54

மு.வ.கலைமணி

பினாங்கு, பிப்.7-
பினாங்கு தீவே தெய்வ மனம் கமழும் வண்ணம் தைப்பூசம் களைகட்டிவிட்டது.
வெள்ளிரதத்தில் சக்தி வேலுடன் பாலதண்டாயுதபாணி ஆயிரக்கணக்கான பக்தர்களின் அர்ச்சனைகள் மற்றும் தேங்காய் உடைப்புகளை ஏற்று பவனி வருகிறார்.

முன்னே பக்தர்கள் புடைசூழ தங்கரத்தில் வெற்றி வேலன் பக்தர்களுக்கு அருள்காட்சி தந்து அர்ச்சனைகள் மற்றும் தேங்காய் உடைப்புகளை ஏற்றுக் கொண்டு தண்ணீர்மலை நோக்கி செல்கிறார்.

சீன பக்தர்களின் தேங்காய் உடைப்பு இவ்வாண்டு மேலும் அதிகரித்துள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான தண்ணீர் பந்தல்கள் அமைத்து அன்னதானம் வழங்கி வருகின்றனர் நமது பக்தர்கள். பின்னிரவு 1.00 மணிக்கு மேல் வெள்ளிரதம் நாட்டுக் கோட்டை நகரத்தார் பாலதண்டாயுதபாணி ஆலயத்தை வந்தடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேப்போல் அரை மணி நேரத்திற்கு முன்னே தங்கரதம் தண்ணீர்மலை அடிவாரத்திலுள்ள தண்டாயுதபாணி ஆலய வளாகத்தை வந்தடையும்.

நாளை சனிக்கிழமை பொது விடுமுறை என்பதால் இன்று வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் என பலரும் பினாங்கு தைப்பூசத்தில் திரண்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here