இலவச இரத்த சுத்திகரிப்பு மித்ராவின் மற்றொரு சமூக சேவை பொன்.வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்

0
29

பத்துமலை, பிப்.9-
மித்ராவின் மற்றொரு சமூக நலத்திட்டத்தை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்.

பி-40 இந்திய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 நோயாளிக்கு இலவச இரத்த சுத்திகரிப்பு சேவையை பத்துமலை கம்போங் லக்சமணா, சாய் ஆனந்தா அறவாரியத்தில் கடந்த புதன்கிழமை பிப்ரவரி 5-ஆம் நாள் இரவு அமைச்சர் தொடக்கிவைத்தார்.

மித்ரா நிதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சமூக நலத்திட்டம் சாய் ஆனந்தா அறவாரியம், பௌத்த சமய த்சூச்சி, மலேசிய செயிண்ட் ஜோன் அம்புலன்ஸ் ஆகிய மூன்று அரசுசாரா அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. 2.9 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின்வழி, இந்திய சிறுநீரக நோயாளிகள் ஓராண்டு காலத்திற்கு இலவசமாக இரத்த சுத்திகரிப்பு சேவையைப் பெறலாம்.

குடும்ப வருமானமாக 3,800 வெள்ளிக்குக் குறைவாக பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைவதற்கு ஏதுவாக வரையப்பட்ட இந்தத் திட்டத்தை தொடக்கிவைத்து உரையாற்றியபோது, மேற்குறிப்பிட்ட மூன்று அரசு சாரா அமைப்புகளின் சமூகக் கடப்பாட்டைப் அமைச்சர் பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசியபோது, முதற்கட்டமாக ஓராண்டு காலத்திற்கு வரையப்பட்ட இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் குறித்து பின்னர் ஆராயப்படும். நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டம் சற்று உதவியாக இருந்தாலும், பொதுவாக அனைவரும் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here