கிரமாட் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி- பிளேட்சர் தமிழ் பள்ளி வாகை சூடியது

0
209

கோலாலம்பூர், பிப்.12-
கிரமாட் மாவட்ட அளவிலான ஆரம்பப் பள்ளிகளுக்கிடையில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் ஜாலான் பிளெட்சர் தமிழ் பள்ளி வெற்றி பெற்றது.

குழு ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்த வேளையில், பெண்கள் பிரிவில் இரண்டாம் நிலையை பெற்றது.

கிரமாட் மாவட்டத்தில் இருக்கும் 32 ஆரம்ப நிலை பள்ளிகளில், இந்த மாவட்டத்தில் இருக்கும் ஒரே தமிழ் பள்ளியான பிளெட்சர் பள்ளி இந்த சாதனை பெருமைக்குரியது என பள்ளி தலைமை ஆசிரியர் ரா. சந்திரசேகரன் தெரிவித்தார்.

“இந்த வெற்றி, தமிழ் பள்ளி மாணவர்கள் சாதனை படைப்பதில் மற்ற பள்ளிகளுக்கு நிகரானவர்கள்,” என்று அவர் கூறினார்.

“பள்ளியில் ஆசியர்களின் வழிகாட்டுதலிலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பிலும் மாணவர்கள் இந்த சாதனை படைத்தார்கள்.

கிராமட் மாவட்ட அளவிலான சாதனை தொடர்ந்து, இப்பள்ளி மாணவர்கள் மாவட்டத்தைப் பிரதிநிதித்து மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக் கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here