கோல லங்காட் பூர்வகுடியினரின் நிலப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு எட்டப்படும் அமைச்சர் பொன். வேதமூர்த்தி தகவல்

0
7

புத்ராஜெயா, பிப்.14-
கோல லங்காட் பூர்வகுடி மக்களின் நிலப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு எட்டப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோல லங்காட் பூர்வகுடி மக்கள் எதிர்நோக்கும் பிரச்னை குறித்து அண்மையில் புகார் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் சம்பந்தப்பட்ட விவகாரம் பூர்வகுடி மேம்பாட்டுத் துறையின்(ஜக்கோவா) பரிசீலனையில் இருந்து வருகிறது. அத்துடன், கோல லங்க்காட் பூர்வகுடி மக்களின் நிலப் பிரச்னைக்குத் தீர்வுகாண ஜக்கோவா தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. பிரச்னைக்குரிய இந்த நிலத்தின் வரையறை குறித்து பொது அறிவிப்பு வெளியிட 2017 செப்டம்பர் 20-யிலிருந்து ஜக்கோவா முயன்று வருகிறது. ஆனால், மாநில அரசின் முடிவுக்காக தொடர்ந்து காத்திருக்கிறோம் என்று பூர்வகுடி மேம்பாட்டுத் துறைக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இதுதொடர்பான அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

ராயாவ் வட்டாரத்தில் உள்ள கோயா புக்கிட் கிச்சில், புக்கிட் சீடிங், புசுட் பாரு மற்றும் கெம்பாஸ் தீவு ஆகிய பூர்வகுடி கிராமங்களைக் கொண்ட பகுதிதான் பிரச்னைக்குரிய நிலப்பகுதி ஆகும். இந்தப் பூர்வகுடி கிராமங்களில் 1,049 பேர் வசிக்கின்றனர்.

இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக பொருத்தமான திர்வை எட்டுவதற்காக தொடர்ந்து மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டுவரும் நிலையில் இத்ன தொடர்பில் ஜக்கோவா உயர்மட்டக் குழுவினருடன் வரும் பிப்ரவரி 17-ஆம் நாள் பிரதமர் துறை அலுவலகத்தில் என் தலைமையில் கூட்டம் நடைபெற இருக்கிறது.

மலேசியக் குடிமக்கள் அனைவரின் உரிமையையும் மாண்பையும் நிலைநாட்ட உறுதிபூண்டுள்ள மத்திய அரசு, 2030 கூட்டு வளப்பத் திட்டத்திற்கு ஏற்ப இந்தச் சிக்கலுக்கும் பொருத்தமான தீர்வை எட்டும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமுக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பான அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here