“சந்தித்த நாள் முதல்” காதலுக்கு இலக்கணம் வகுத்துள்ளது பிப்ரவரி 13 முதல் திரைக் காணும்

0
167

குணாளன் மணியம்

பெட்டாலிங் ஜெயா,பிப்.11-
பேசிய தமிழுக்கும் பேசாத மொழிக்கும் காதல் இலக்கணத்தை பதித்துள்ள “சந்தித்த நாள் முதல்” திரைப்ப்படம் பிப்ரவரி 13 தொடங்கி நாடு தழுவிய நிலையில் திரைக் காணவுள்ளது.

நம்மை வியக்க வைக்கும் அளவுக்கு தோட்டப்புற சூழலைக்கு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள
“சந்தித்த நாள் முதல்” திரைப்படத்தின் பிரிமியர் ஷோ சிறப்புக் காட்சி நேற்று பிப்ரவரி 10 திங்கட்கிழமை பெட்டாலிங் ஜெயா லோட்டஸ் ஃபைப் ஸ்டார் திரையரங்கில் (PETALING JEYA LOTUS FIVE STAR) திரையீடு கண்டது. இதில் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் சிறப்புக் காட்சியைக் காண வந்திருந்தனர்.

“சந்தித்த நாள் முதல்” திரைப்படம் ஒளிப்பதிவில் முதலிடம், இயக்கம் வியக்க வைக்கிறது. புதுமுகங்களின் நடிப்பு பிரமாதம். மூன்று பாடல்கள் தேனமுதம். இசை ஈர்த்தது. காட்சிக்கு காட்சி காண வைத்தது. “சந்தித்த நாள் முதல்” காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? காதலுக்கு இலக்கணம் வகுத்தார்களா? “சந்தித்த நாள் முதல்”
திரைப்படம் பதில் சொல்ல , நீங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த 2020ஆம் ஆண்டில் முதல் திரைப்படமாக திரையேற காத்துக் கொண்டிருக்கும் “சந்தித்த நாள் முதல்” பிப்ரவரி 13ஆம் நாள் அன்பர்கள் தினத்தின் முதல்நாள் நாடு தழுவிய நிலையில் திரையேறவுள்ளது.

“சந்தித்த நாள் முதல்” திரைப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரும் தங்கள் திறமையைக் காட்டி நடித்துள்ளனர். இதற்காக படத்தின் இயக்குநர் ஷீலா பிரவீணா தன் கடுமையான உழைப்பை போட்டுள்ளார் என்றுதான் கூற வேண்டும்.

“சந்திந்த நாள் முதல்” 90ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஒரு காதல் கதை. அன்றைய சூழலை மையமாகக் கொண்டு ஷீலா பிரவீணா இயக்கத்தில் இன்றைய இளைஞர்கள் படை உருவாக்கிய ஒரு காதல் காவியம் “சந்தித்த நாள் முதல்”.

இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகள் பேருந்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வியக்க வைக்கும் ஒரு சிறப்பு அம்சமாக 90களில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பேருந்தை வண்ணம் பூசி உருவாக்கி அதில் ம படப்பிடிப்பை நடத்தியது நமது இயக்குநர் ஷீலா பிரவீணாவின் தனித்திறமையாகும்.

இப்படத்தின் இயக்குநர் வி.ஷீலா பிரவீணா கலைத்துறையில் 20 ஆண்டுகள் நல்ல அனுபவம் கொண்டவர். அறிவிப்பாளர், நடிப்பு, நடனம் என்று பலவற்றில் ஈடுபாடு கொண்டு தற்போது ஒரு திரைப்படத்தையும் தயாரித்து இயக்கியுள்ளார்.

தோட்டப்புறத்தில் நடந்த ஒரு உண்மை காதல் சம்பவத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள
“சந்தித்த நாள் முதல்” திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். தோட்டப்புறத்தில் வாழ்ந்து கொண்டு படிக்கும் வயதில் பள்ளிப் பருவத்தில் காதல் வயப்படுத்தால் பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் நிலையை உணர்த்தும் ஒரு திரைப்படம் “சந்தித்த நாள் முதல்”

காதல், அன்பு, பாசம் என்று பல கோணங்களில் கதை பின்னப்பட்டு இடைஇடையே நகைச்சுவையும் சேர்க்ப்பட்டுள்ளது. இந்த “சந்தித்த நாள் முதல்” திரைப்படத்தின் சிறப்பு அம்சமே கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட முக்கிய கதாப்பாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்க வைக்கப்பட்டுள்ளதுதான். இப்படத்தில் தோட்டப்புற சூழல் மிகவும் அழகாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் புதுமுகங்கள் நவீன முரளி, மெர்வின், கிஷாலினி, மெல்வின், ரிக்கு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சங்கபாலன், தர்மேந்திரா, லீனா, ராஜேஸ்வரி, லக்‌ஷ்மி, சசிகுமார், கல்பனா ஸ்ரீ, அசோக், சசிதரன் ராஜூ, கே.எஸ்.மணியம், ராஜம், சாய் கோகிலா, டேவிட், ராதா சக்குபாய், கிருஷ்ண பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த “சந்தித்த நாள் முதல்” திரைப்படத்தை டோப் மூவிஸ் மற்றும் இமெஜிநெஷன் மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு ஆகிய வேலைகளை லீலா பிரவீணா வெற்றிகரமாக கவனித்துள்ளார். இப்படத்தின் பிரமாதமான இசையை தியாகு முருகேசு, வர்மன் இளங்கோவன் வழங்கியுள்ளனர். பாடல் தியாகு முருகேசன், லோரன்ஸ். தலைமை தயாரிப்பு சுரேன் நவரத்தினம். இணை தயாரிப்பு கே.காந்திபன் என்ற பென்ஜி. ஒளிப்பதிவு எஸ்.கே.நாகேன். புரொடக்சன்ஸ் நிர்வாகி டேவிட் அந்தோணி.

நாடு தழுவிய நிலையில் பிப்ரவரி 13 தொடங்கி திரையேறவிருக்கும் “சந்தித்த நாள் முதல்” திரைப்படம் கண்டிப்பாக காண வேண்டிய திரைப்படம் என்றால் அது மிகையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here