சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச கொண்டாட்ட நிகழ்வுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சிறப்பு வருகை

0
205

       வருண் மூர்த்தி

சுங்கை சிப்புட், பிப் –
9-தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் ஒரு திருநாளாக நாடு தழுவிய நிலையில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட் தொகுதி மக்களோடு தைப்பூசத் திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

இந்திய சமுதாய மக்கள் நலனில் எப்போதும் தனி அக்கறை காட்டி செயல்பட்டு வரும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ம.இ.கா தேசியத் தலைவர், மேலவைத் தலைவர் என்ற நிலையில் சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவஸ்தான பரிபாலன சபாவின் கீழ் செயல்படும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வருகை மேற்கொண்டார்.

சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு நேற்று பிப்ரவரி 8 காலை 11.30 மணியளவில் வருகை தந்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களை ஆலய தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வரவேற்றனர். டான்ஸ்ரீ அவர்களுக்கு பரிவட்டம் கட்டி, மாலை, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் இந்த வருகை ஒரு வரலாற்றுப்பூர்வமான வருகையாகும். ஏனெனில் கடந்த கால தைப்பூச கொண்டாட்டங்கள் மிகவும் சிறிய அளவில் கொண்டாடப்பட்டதால் பெருந்தலைவர்கள் இங்கு வருகை தரவில்லை. இந்நிலையில் இவ்வாண்டு தைப்பூசம் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்ட நிலையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் வருகை மகிழ்ச்சிய தந்ததாக அத்தொகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஜாலான் லிந்தாங் எனுமிடத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றிய வேளையில் வழி நெடுகிலும் பக்தர்கள் பசி, தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம்,இலவச மருத்துவ முகாம் உள்ளிட சில நிகழ்வு பந்தலுக்கு வருகை மேற்கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், சாலையில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கும் வருகை மேற்கொண்டு மக்களை சந்தித்தார். தண்ணீர் பந்தல் அமைத்திருந்த சில அரசு சாரா இயக்கத்தை சேர்ந்தவர்களையும் டான்ஸ்ரீ சந்தித்து கலந்துரையாடினார்.

ம.இ.காவின் கோட்டையாக திகழும் சுங்கை சிப்புட் தொகுதியைச் சேர்ந்த மக்கள் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் தைப்பூச வருகை தங்களுக்கு புதுத்தெம்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் பலர் தங்கள் கருத்தை வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here