பத்துமலை தைப்பூசத்தில் சுங்கை பீளேக் அதிசய விநாயகர் ஆலயத்திற்கு மந்திரி பெசார் மானியம்

0
4

சிப்பாங்,பிப்.10-
சிலாங்கூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் சார்பில் பத்துமலை தைப்பூச விழாவில் சிப்பாங் மாவட்டம் சுங்கை பீளேக் அருள்மிகு அதிசய விநாயகர் ஆலயத்திற்கு மானியம் வழங்கப்பட்டது என்று ஆலயத் தலைவர் சந்திரன் கணேசன் தெரிவித்தார்.

பத்துமலை தைப்பூச விழா தொடர்பில் முதல் நாள் பிப்ரவரி 7, வெள்ளிக்கிழமை இரவில் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை மேற்கொண்ட மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 35 ஆலயங்களுக்கு மானியம் வழங்கினார்.

மாநிலத்தில் உள்ள ஆலயங்களின் சார்பில் திருப்பணி, ஆன்மிக சேவை, கலை-கலாச்சார பணி, கல்விப் பணி உள்ளிட்ட சமூக சேவை என அந்தந்த ஆலயங்களின் சார்பில் மானியம் கோரி மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் சிப்பாங், சுங்கை பீளேக் பட்டணத்தில் அமைந்துள்ள அருள்மிகு அதிசய விநாயகர் ஆலயத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிக்காக மாநில அரசிடம் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. கோரிக்கையை பரிசீலித்த மாநில அரசு தங்களின் ஆலயத்திற்கு மானியம் வழங்கி சிறப்பித்தது என்று ஆலயத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆலயத் துணைத் தலைவர் தயாளன் சன்னாசியும் சந்திரனும் ஒருசேர மானியக் காசோலையைப் பெற்றுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here