பினாங்கு நாட்டுக் கோட்டை நகரத்தாரின் வெள்ளிரத ஊர்வலம் 126 ஆண்டாக நடைபெறுகிறது

0
88

மு.வ.கலைமணி

பினாங்கு, பிப்.5-
பினாங்கு நாட்டுக் கோட்டை நகரத்தாரின் வெள்ளிரத ஊர்வலம் 126 ஆண்டாக நடைபெறவுள்ளது.
இந்த வெள்ளிரத ஊர்வலம் பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.30 மணிக்கு பினாங்கு சாலையிலுள்ள கோயில் வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களோடு சகல ஆகம பூஜைகள் சடங்குகளோடு பவணி வரும்.

இவ்வருட ஊர்வலம் 126 ஆண்டாக மிக சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெறும் என நாட்டுக் கோட்டை நகரத்தார் நிர்வாகத்தின் ஏற்பாட்டுக் குழுவின் அறங்காவலர் சொ.வீரப்பன் தெரிவித்தார்.

முருகப் பெருமான், சக்தி வேலோடு சகல அலங்காரத்துடன் ரதம் மீது அமர்ந்து கோயில் வீட்டிலிருந்து புறப்பட்டு, பல வீதிகள் சென்று பின்னிரவு 1.00 மணியளவில் தண்ணீர்மலை நகரத்தார் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தை அடையுமென அரங்காவலர் சொ. வீரப்பன் கூறினார்.

நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் கொண்டு வரும் பாலை, உடனுக்குடன் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சக்திவேலுக்கு அபிசேகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தைபூசத்திற்கு மறுநாள் 9.2.2020 மாலை 6.30 மணிக்கு வெள்ளி ரதம் தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலயத்திலிருந்து புறப்படும். பல சாலைகளில் பவணி வந்து 10.2.2020 மதியம் 2.00 மணியளவில் பினாங்கு சாலையில் உள்ள கோயில் வீட்டிற்கு வந்தடையும் என்று செய்தியாளர்களிடம் அரங்காவலர் குழுவைச் சேர்ந்த சொக்கலிங்கம், அருணாசலம், ப. தண்ணீர்மலை, செ.ஆறுமுகம், அழ. லெட்சுமணன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதனிடையே,
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிடும் இந்த தைப்பூச பெருவிழாவில் பக்தர்கள் சமய நெறிகளை கடைபிடித்து பிற இனத்தவர் போற்றும் தெய்வீக சமய விழாவாக அமைய வேண்டுமென சமயம் சார்ந்த பொது அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here