ம.இ.கா தைப்பூச தண்ணீர் பந்தலில் உஷா நந்தினி தலைமையில் மகளிர் அணியின் சேவை

0
254

கோலாலம்பூர், பிப்.10- தைப்பூசத்தை முன்னிட்டு ம.இ.கா தலைமையகம் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் நடவடிக்கையில் ம.இ.கா மகளிர் அணி முக்கியப் பங்கு வகித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 6 வியாழக்கிழமை இரவு 10 மணி தொடங்கி ம.இ.கா தண்ணீர் பந்தல் நடவடிக்கையில் இறங்கியது. கலைநிகழ்ச்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ம.இ.கா மகளிர் அணித் தலைவி திருமதி உஷா நந்தினி அவர்களின் தலைமையில் மகளிர் அணியினர் பம்பரமாக செயல்பட்டு பக்தர்களுக்கு சுவை பானம், அன்னதானம் வழங்கினர்.

வெள்ளிரதம் கடந்த பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ம.இ.கா தலைமையகம் வந்தடைந்தத போது திருமதி உஷா நந்தினி பக்தர்களுக்கு சுவாசக் கவசங்களை வழங்கினார். அவருக்கு மகளிர் அணியினர் உதவியாக இருந்தனர். ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆலோசனையின் பேரில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு சுவாசக் கவசம் வழங்கப்பட்டது.

அதேநேரத்தில் உஷா நந்தினி தலைமையிலான மகளிர் அணியினர் பக்தர்களுக்கு நெஸ்காபே சுவை நீர், பொங்கல், கச்சான் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் வழங்கினர். இந்த தண்ணீர் பந்தல் நிகழ்வில் ம.இ.கா மகளிர் அணியினர் முக்கியப் பங்காற்றியதாகவும் ம.இ.காவில் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் மகளிர் அணி தொடர்ந்து துடிப்போடு செயல்படும் என்றும் திருமதி உஷா நந்தினி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here