கோவிட் 19 நோய் தொற்றை கட்டுப்படுத்த, எல்லா கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை பிரதமர் பெற வேண்டும். முன்னாள் ஜாசா அதிகாரி எம்.பார்த்திபன் வலியுறுத்து.

0
4

மு.வ.கலைமணி

பினாங்கு, மார்ச் 20-
கொரோனா நோய் தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில், நாட்டு மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் பிரதமரும், அதன் அரசாங்கமும் இறங்கியுள்ள போதிலும் இன்னும் பல நல்ல ஆலோசனைகளைப் பெற, ஆளுங்கட்சி மற்றும் எதிக்கட்சிகளின் தலைவர்களை ஒருங்கே அழைத்து பேசுவது சாலச் சிறந்தது என்று கருத்துகள் முன் மொழியப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நாடும் நாட்டு மக்களும் இந்நோய் தொற்று தாக்கத்தில் இருந்து விடுப்பட்டு சுக வாழ்வு வாழ பல தரப்பட்ட தலைவர்களின் ஆலோசனைகள் பெறுவது என்பது சிறந்த பயனுள்ள ஒன்றாகும் என முன்னாள் சிறப்பு விவகாரத் துறையின்( ஜாசா) அதிகாரி எம்.பார்த்திபன் கூறினார்.

இதுவரையில் சிறப்பானதொரு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டான்ஸ்ரீ மொஹிடின் யாசினை பாராட்டுவதாக தெரிவித்த அவர், மேலும் பல தீவிர ஆலோசனைகளை நமது கட்சிகளின் தலைவர்களிடம் பெற்று அதன்படி திட்டமிட்டு செயல்படுத்தப்படுமேயானால் விரைவாக இந்நோயின் பிடியிலிருந்து விடுபடலாம் என அவர் கருத்துரைத்தார்.

பிரதமரின் தொடர் நடவடிக்கைக்கு இத்தகைய ஆலோசனைகள் பெரிதும் உதவிடும் என்ற நம்பிக்கையில், ஒன்று சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைகள் பெறுவது அவசியமாக படுவதாக அவர் கூறினார்.

ஒரு வேளை பிரதமரின் இம்முயற்சி தோழ்வியுறுமேயானல், பின்னர் எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது ஆளுங்கட்சி தலைவர்களின் பழிச்சொல்லுக்கும் ஆளாக நேரிடும் என்ற வகையில் பிரதமரின் பார்வை எல்லா தலைவர்களின் பக்கமும் திரும்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, நடமாட்ட கட்டுப்பாட்டினை நம் நாட்டு மக்கள் முழுமையாக கடைபிடிக்கவில்லை என அறியப்படுகிறது. இதனை நாம் ஏற்றுக் கொள்வதற்கில்லை என்ற அவர் மக்கள் முழுமையாக இந்நோயிலிருந்து விடுபட அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், இது நம் எல்லோருடைய கடமையாக கொள்ள வேண்டும் அவர் என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here