சுபம் கேஸ் & கேரி – சுபம் உணவகம் 350 பேருக்கு இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கியது

0
84

மு.வ.கலைமணி

ஜோர்ஜ்டவுன், மார்ச் 25-
பினாங்கு, லிட்டல் இந்தியா, மார்க்கேட் ஸ்திரிட்டில் சிறப்பாக இயங்கி வரும் சுபம் உணவகம், சுபம் கேஸ் & கேரி நிறுவனம் தனது பொதுநலச் சேவையாக இங்குள்ள சுமார் 350 பேருக்கு மார்ச் 25 புதன்கிழமை மதியம் உணவு பொட்டலங்களை இலவசமாக வழங்கியது.

இங்குள்ள கடைகளில் வேலைச் செய்யும் இந்தியர்கள், பொதுமக்கள், அரசாங்கத் துறை ஊழியர்கள் ஆகியோர் இந்த உணவுப் பொட்டலங்களை பெற்றுச் சென்றதாக அதன் உரிமையாளர் முருகேசன் கூறினார்.

கோவிட் 19 தாக்கத்தால் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அதன் ஊழியர்களுக்காகவும்,பொது மக்களுக்காகவும், மற்றும் இங்கு பணிப் புரியும் அரசுத் துறை ஊழியர்களுக்காகவும் தாம் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோவிட் 19 நடமாட்ட கட்டுப்பட்டு ஆணையை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதை தொடர்ந்து மக்கள் நிச்சயம் கட்டுப்பாடுகளுடன் இருப்பது நல்லது என்றும் நாம் வீட்டிலேயே இருப்பதனால் நோயின் பிடியிலிருந்து காப்பாற்றப்படலாம் என்றும் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நமது சித்த மருத்துவத்தை நம் மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

எக்காலக் கட்டத்திலும் எங்களுக்கு பேராதரவு வழங்கி வரும் நம் மக்களுக்கு இதுப்போன்ற அவசரக் காலக் கட்டத்தில் நாங்களும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நல்நோக்கத்தில், இதுபோன்ற சேவைகளை, செய்வதை நாம் வழக்கமாக்கி கொண்டுள்ளோம்.
தைப்பூச விழாக் காலங்களிலும் நல்லுதவிகளை செய்து வருவதாக முருகேசன் சொன்னார்.

தமது அடுத்த கட்ட சேவையாக உணவு வழங்குவதலுடன் முகக்கவசம், கையுறை போன்ற பொருட்களையும் வழங்க ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறினார்.

பெருமிதத்துடனும் புன்சிரிப்பிலும் விடை பெற்ற அவர்
மக்களுக்கு செய்யும் சேவையே, மகேசனுக்கு செய்யும் சேவையாக கருதுவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here