சென்னை, திருச்சி பயணிகளை மீட்க மேலும் இரண்டு ஏர் ஆசியா விமானங்கள் இன்றிரவு புறப்படும்

0
136

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 24-
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழ்நாடு, திருச்சி மற்றும் சென்னையில் சிக்கிக் கொண்ட மேலும் 372 பயணிகளை மீட்க மேலும் இரண்டு ஏர் ஆசியா விமானங்கள் இன்றிரவு அங்கு புறப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

இந்த இரண்டு விமானங்கள் சென்னை, திருச்சிக்கு இன்று இரவு புறப்பட்டு அங்குள்ள 372 பயணிகளை ஏற்றிக் கொண்டு நாளை மார்ச் 24 செவ்வாய்க்கிழமை நாடு திரும்பும் என்று ம.இ.கா தலைமைச் செயலாளர் டத்தோ அசோஜன் தெரிவித்தார்.

சென்னை, திருச்சியில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்க 10 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி செலவில் ம.இ.கா 6 ஏர் ஆசியா சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இரண்டு விமானங்கள் கடந்த சனிக்கிழமை இரவு சென்னை மற்றும் திருச்சிக்குப் புறப்பட்டு 369 பயணிகளை மீட்டு வந்தது.

மலேசிய பயணிகளை மீட்க ம.இ.கா மேற்கொண்ட இந்த தீவிர முயற்சிக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் அல்லும் பகலும் பாடுபட்டுள்ளதாக டத்தோ அசோஜன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here