நாட்டில் இக்கட்டான சூழலில் கடமையாற்றும் காவல்துறையை போற்றுவோம் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் போலீஸ்தின வாழ்த்து

0
29

கோலாலம்பூர், மார்ச் 25-
நாட்டில் இக்கட்டான சூழலில் கடமையாற்றும் காவல்துறையின் கடமையுணர்வை போற்றுவோம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது போலீஸ்தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கோவிட் 19 நோய் தொற்று தாக்கத்தில் இருக்கிறது. இதில் 17 பேர் மரணமடைந்த வேளையில் 1,700க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் அரசாங்கம் விதித்துள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பொதுமக்கள் பின்பற்ற காவல்துறை பணியாளர்கள், அதிகாரிகள் அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர்.

இன்று போலீஸ் தினம் கொண்டாடப்பட்டாலும்கூட காவல்துறையினர் தங்கள் கடமையில் இருந்து பின்வாங்கவில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு ஆணையை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய நாடு தழுவிய நிலையில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேளையில் காவல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் போலீஸ்தின வாழ்த்துகளையும் அதோடு கடமையுணர்வுக்கு நன்றியுத் தெரிவித்துக் கொள்வதாக மலேசிய மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here