பிரபல சினிமா நடிகர் விசு சென்னையில் காலமானார்

0
24

தேசம் செய்தியாளர் முனைவர் வெங்கடேஷ்

சென்னை, மார்ச் 22-
பிரபல சினிமா நடிகர் விசு சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

மேடை நாடகத் துறையில் இருந்து சினிமா துறைக்கு இயக்குநர் கே.பாலச்சந்தர் மூலம் உதவியாளராக பணியைத் தொடங்கிய விசு கடந்த 1 ஜூலை 1941இல் பிறந்தார். அவருக்கு வயது 74. சினிமாவில் இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என்று தன்னுள் திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

சினிமாத் துறையில் கடைசி வரை பணியாற்றி வந்த விசு மணல் கயிறு எனும்
குடும்பப் பங்கான திரைப்படத்தின் வழி பிரபலமானார். சம்சாரம் அது மின்சாரம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு சிகிச்சை பலனளிக்காமல் மார்ச் 22 ஞாற்றுக்கிழமை காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here