மலேசிய தெலுங்கு வம்சாவளியினர் வீட்டில் பிரார்த்தனையோடு உகாதி பண்டிகையை கொண்டாடுவோம் மலேசிய தெலுங்கு அறவாரிய தலைவர் டத்தோ காந்தராவ் வாழ்த்துச் வலியுறுத்து

0
86

கோலாலம்பூர், மார்ச் 25-
மலேசிய தெலுங்கு வம்சாவளியினர் வீட்டில் பிரார்த்தனையோடு உகாதி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று உகாதி பண்டிகை வாழ்த்துச் செய்தியில்
மலேசிய தெலுங்கு அறவாரிய தலைவர் டத்தோ காந்தராவ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த 2020ஆம் ஆண்டில் உகாதி பண்டிகை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டாடுகிறோம். வழக்கமாக ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து, உறவினர்கள், நண்பர்களை வீட்டிக்கு அழைத்து கொண்டாடுவோம். ஆனால், இந்த கோவிட் 19 நோய் தொற்று காரணமாக வீட்டிலேயே கொண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக டத்தோ காந்தராவ் தெரிவித்தார்.

மலேசிய தெலுங்கு வம்சாவளியினர் அனைவரும் வீட்டில் கூட்டு பிரார்த்தனையோடு தத்தம் குடும்ப அளவில் இந்த உகாதி பண்டிகையை கொண்டாட வேண்டும். இந்த கோவிட் 19 நோய் தொற்று விரைவாக தடுக்கப்பட இறைவனை பிரார்த்தனை செய்வோம். இந்த வேளையில் மலேசிய தெலுங்கு மக்கள் அனைவருக்கும் உகாதி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். “உகாதி சுபகாஞ்சலோ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here