ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பெரு முயற்சியினால் 369 பயணிகள் இன்று அதிகாலை பாதுகாப்பாக நாடு திரும்பினர்

0
143

குணாளன் மணியம்

சிப்பாங், மார்ச் 22-
ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பெருமுயற்சியினால் சென்னை, திருச்சியில் சிக்கிக் கொண்ட 369 பயணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

ம.இ.கா இவர்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 10 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி செலவில் அரசாங்க உதவியுடன் முதல் கட்டமாக 369 பேர் ஏர் ஆசியா சிறப்பு விமானம் மூலம் அதிகாலை 4.50 மணிக்கும் அதிகாலை 5.00 மணிக்கும் பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

கோவிட்-19 நோய் தொற்று காரணமாக இந்திய அரசு வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கு தடை விதித்ததால் 1,519 பயணிகள் சென்னை, திருச்சி, மும்பையில் சிக்கிக் கொண்டனர். இதில் முதற்கட்டமாக 369 பேர் மீட்கப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலமாக இன்று காலை நாடு திரும்பினர்.

சென்னையில் இருந்து ஏர் ஆசியா ஏகே10 மற்றும் திருச்சியில் இருந்து ஏகே22 ஆகிய இரண்டு விமானங்கள் 186 மற்றும் 183 பயணிகள் என்று பொத்தம் 369 பயணிகளை சுமந்து கோலாலம்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

நாடு திரும்பிய அனைவரும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் செய்த உதவியை பாராட்டி நன்றி தெரிவித்தனர். இவர்களை மீட்டு நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இந்திய அரசுடன் பேச்சு நடத்தி, சிறப்பு அனுமதியியைப் பெற மலேசிய அரசாங்கம் நடவடிக்கையில் இறங்க காரணமாக இருந்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் ஆகிய இருவருக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

சென்னை, திருச்சி, மும்பையில் இருக்கு ஏனையவர்களை மீட்க 4 ஏர் ஆசியா மற்றும் 2 மாஸ் விமானங்கள் அங்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here