வீட்டில் இருந்து வழிபாடுகளோடு உகாதி பண்டிகையை கொண்டாடுங்கள் வாழ்த்துச் செய்தியில் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்து

0
36

கோலாலம்பூர், மார்ச் 25-
மலேசிய தெலுங்கு வம்சாவளியினர் வீட்டில் இருந்து வழிபாடுகளோடு உகாதி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று உகாதி பண்டிகை வாழ்த்துச் செய்தியில்
ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

உகாதி பண்டிகையை ஒரு இறுக்கமான காலகட்டத்தில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கோவிட் 19 நோய் தொற்றுக் கிருமி காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், மலேசிய தெலுங்கு வம்சாவளியினர் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வழிபாடுகளுடன் உகாதி பண்டிகையை கொண்டாடுங்கள் என்று மலேசிய மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ வலியுறுத்தியுள்ளார்.

பண்டிகை என்றாலே நாம் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால், இந்த கோவிட் 19 நோய் தொற்று தாக்கத்தினால் அரசாங்கம் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை விதித்துள்ளதால் மக்கள் வீட்டில் இருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

நாம் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியாது. வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்களை அழைக்க முடியாது. ஆகையால், நடப்பு சூழலை உணர்ந்து குடும்பத்தினருடன் வீட்டிலேயே உகாதி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மலேசிய வாழ் தெலுங்கு வம்சாவளியினர் அனைவருக்கும் தமது உகாதி பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here