இவ்வாண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கவிருக்கும் ஒரு மாறுபட்ட திரைப்படமான பரமபதம் 11 அனைத்துலக விருதுகள் வென்று சாதனை

0
74

கோலாலம்பூர், ஜுன் 1-

இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட திரைப்படமாக திகழும் பரமபதம் 11

அனைத்துலக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

மலேசியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் காதல், நகைச்சுவை, குண்டர்கும்பல் என்ற கதையம்சத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்டு “பரம்பதம்” எனும் ஒரு மாறுபட்ட திரைப்படத்தை தந்திருக்கும் விக்னேஷ் பிரபு, தனேஷ் பிரபு, லட்ச பிரபு குழுவினரின் முயற்சிக்கு பரிசாக இத்திரைப்படம் இந்தியா, நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்  மொத்தம் 11  அனைத்துலக விருதுகளை பெற்றுத் தந்துள்ளது.

இந்த “பரமபதம்” திரைப்படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும், இந்தியாவில் நடைபெற்ற தகோர் திரைப்பட விழாவில் Best Feature விருதும் கோயம்புத்தூர் திரைப்பட விழாவில் சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்று சாதனை படைத்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவின் MLC Hollywood International Festivals விருது விழாவில் 5 பிரதான பிரிவுகளில் 4 விருதுகள் பரம்பதம் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது விழாவில் “பரமபதம்” திரைப்படத்திற்கு படத்தின் பிரதான இயக்குநரும் படத்தொகுப்பாளருமான தனேஷ் பிரபுவுக்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருதும் படத்தின் இணை இயக்குநரும் நடிகருமான விக்னேஷ் பிரபுவுக்கு best obster Performance விருதும் சிறந்த இசைக்கான விருது பாலன் ராஜ் மற்றும் ஜெகதீஸ் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் பரமபதம் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

“பரமபதம்” திரைப்படத்தின் நடிகர் பவித்திரன் பெயர் Best Stealing Performance பிரிவில் இறுதி சுற்று வரை சென்றுள்ளது. இந்த பிரிவுக்கு விருது கிடைக்காவிட்டாலும் இறுதிச்சுற்று வரை சென்றது பெருமைக்குரிய விஷயமாகும். இந்த “பரமபதம்” திரைப்படம் மேலும்  5 விருதுகளையும் வேறு நாடுகளிலும் பெற்றுள்ளது. எனினும் இந்த 6 விருதுகள் உயரிய விருதாகும் என்று விக்னேஷ் பிரபு தேசம் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

இந்த “பரமபதம்” திரைப்படம் ஒரு மாறுபட்ட திரைப்படம். நல்ல கதையம்சம். சிறந்த நடிகர்கள். சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை என்று MLC தோற்றுநர், ஆஸ்கார் விருது தகுதியாளர் மற்றும் விருது பெற்றுள்ள இயக்குநருமான Freddy Moyane பாராட்டியுள்ளார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோர் பதம் என்பது போல “பரம்பதம்” திரைப்படம் மக்களை  அதிரவைக்கும் என்பது படக்குழுவினர் வெளியிட்ட அதன் டீசர் வழி தெரியவந்துள்ளதால் அனைத்துலக கௌரவத்தை பெற்றுள்ளது.

மலேசிய மக்களுக்கு ஒரு மாறுபட்ட திரைப்படத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் “பரம்பதம்” எனும் ஒரு மாறுபட்ட திரைப்படத்தை வழங்கியிருக்கிறோம். 

சாய் நந்தினி மூவி வேல்டு சார்பில் டாக்டர் லட்சப்பிரபு ராஜகோபால் தயாரிப்பில் தனேஷ் பிரபு முதன்மை இயக்கத்தில் விக்னேஷ் பிரபு இணை இயக்கத்தில் “பரம்பதம்” திரைப்படம் தயாரிக்ககப்பட்டுள்ளது.இசை பாலன் ராஜ், எம்.ஜெகதீஸ். பாடகர்கள் பம்பா பாக்கியா, யுஹாசினி, மதியழகன், கணேசன் மனோகரன். பாடல்வரிகள் பியோனிக்ஸ் தாசன். ஒளிப்பதிவு ஜெகதீஸ்வரன், படத்தொகுப்பு தனேஷ் பிரபு, தயாரிப்பு டாக்டர் லட்ச பிரபு ராஜகோபால்.

இத்திரைப்படத்தில் கே.எஸ் மணியம், அகோதரன், பென்ஜி, விக்னேஷ் பிரபு, சிங்கை ஜெகன், விக்கி நடராஜா, ரிஷிகேசன், கௌசல்யா, ரவி, பவித்திரன், சசிவா ரூபன், கவிமாறன், தனேஷ் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

மலேசியாவின் முதல் கேம்போர்ட் திரைப்படமான “பரம்பதம்” எப்படி இருக்கப் போகிறது என்ற பல்வேறு கேள்விகளுக்கு அதன் டீசர் பதிலளிதுள்ளது. 

யாரும் போகாத இடத்திற்குள் கமிரா வழி புகுந்துள்ளது “பரம்பதம்”. அதன் பிரமாண்ட காட்சிகள் “களம்” டீசரில் களம் கண்டுள்ளது. மக்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை “பரம்பதம்” ஏற்படுத்தியுள்ளது.. 

மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட படைப்பாக மலர்ந்துள்ள “பரம்பதம்” திரைப்படத்தை தயாரிக்க விக்னேஷ் பிரபு, தனேஷ் பிரபு குழுவினர் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

மர்ம வீடு, மர்ம வீட்டில் அதிரடி காட்சிகள், மர்ம குகை, அதன் மர்மங்கள், கேம்போர்ட் மர்மங்கள் என பல்வேறு மர்மங்களை “பரம்பதம்” பூட்டி வைத்துள்ளது. “பரம்பதம்” மக்களை அதிரவைக்கும் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.

இந்த “பரமபதம்” திரைப்படம் மக்கள் மனதில் ஆழப்பதியும் என்பது திண்ணம். மொத்தத்தில் ரசிகர்களை ஆட்டிப் படைக்க இவ்வாண்டு இறுதியில் வெளி வருகிறான் “பரம்பதம்”.

மலேசியாவின் முதல் கேம்போர்ட் திரைப்படம் எனும் பெருமையுடன் “பரம்பதம்” களம் காண போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here