Saturday, July 11, 2020
Home News மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்

 
சென்னை, ஜூன் 24-
மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
 
இதனால் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்திய முதலமைச்சர்
பாதிப்பு அதிகமாகும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த  முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு வாய்ப்பும் வழங்கியுள்ளார்.
 
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரை,  மதுரை ஆகிய இடங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கோரோனா திடீரென அதிகரித்துள்ளது.
 
திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூரில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரியலூர், திருப்பூரை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு

தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி   கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...

நான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி

சென்னை, ஜூலை 9-  தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.    இன்று கே. பாலசந்தரின் 90ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவர்...

கோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 9-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 13 பேர் இன்று...

தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து

புத்ராஜெயா, ஜூலை 9 –  தேசிய கோட்பாடு கல்விதான்  நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.    நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...

Recent Comments