Saturday, July 11, 2020
Home Desam 24X7 மக்களை ஏமாற்றியவர்களை மக்களே தகுந்த பாடம் புகட்டுவார்கள் பேராக் மாநில ஜ.செ.க அதிரடி அறிக்கை

மக்களை ஏமாற்றியவர்களை மக்களே தகுந்த பாடம் புகட்டுவார்கள் பேராக் மாநில ஜ.செ.க அதிரடி அறிக்கை

ஈப்போ, ஜூன் 26- 
மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு மக்களே தகுந்த பாடம் புகட்டுவார்கள் என ஜ.செ.க ஓர் அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
 
எங்கள் கட்சியை தூய்மைப்படுத்தியத்திற்கு கெராக்கான் கட்சிக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக பேராக் மாநில ஜ.செ.க கட்சி தெரிவித்துள்ளது.
 
ஆ.சிவசுப்ரமணியம் மற்றும் போல் யோங் மார்ச் மாதத்தில் ஜ.செ.க  கட்சியிலிருந்து கட்டொழுங்கு அமலாக்க பிரிவினரால் நீக்கப்பட்டனர். புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்ரமணியம் நீக்கப்பட்டது முதல், புந்தோங் சட்டமன்ற தொகுதியை வி.சிவகுமார் பார்த்து வருகிறார். அவர் மூலமாக ஜ.செ.க புந்தோங் மக்களுக்கான சேவையை தொடர்ந்து கொண்டு வருவதாக பேராக் மாநில ஜ.செ.க கூறியது. 
 
அதோடு, இன்று காலையில் ஆ.சிவசுப்ரமணியத்துடன் சென்ற ஐ.செ.க பிரமுகர்களும் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பேராக் மாநில ஜ.செ.க அதிரடியாக அறிவித்துள்ளது. இத்துடன் வருகின்ற 15ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் சட்டமன்ற தொகுதியில் ஜனநாயக செயல் கட்சி போட்டியிடும் என ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக பேராக் மாநில ஜ.செ.க தெரிவித்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு

தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி   கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...

நான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி

சென்னை, ஜூலை 9-  தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.    இன்று கே. பாலசந்தரின் 90ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவர்...

கோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 9-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 13 பேர் இன்று...

தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து

புத்ராஜெயா, ஜூலை 9 –  தேசிய கோட்பாடு கல்விதான்  நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.    நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...

Recent Comments