Sunday, July 12, 2020
Home Desam 24X7 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் 10009 சிவலிங்கம் அடங்கிய சிவனாலய அடிக்கல் நாட்டு விழா

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் 10009 சிவலிங்கம் அடங்கிய சிவனாலய அடிக்கல் நாட்டு விழா

தென் செபராங் பிறை. ஜூன் 28-
சிம்பாங் அம்பாட், அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தான ஏற்பாட்டில், ஆயிரத்து ஒன்பது லிங்கம் அடங்கிய சிவனாலயத்திற்கான  பூஜையுடன் அடிக்கல் நாட்டு விழா அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
 
தேவஸ்தானத்தின் மேம்பாட்டு திட்டத்தில் இச்சன்னதி அமைக்கும் ஓர் ஏற்பாட்டினை நிர்வாகம் மேற்கொள்ள பல பக்தியுள்ளங்கள் துணை நின்றப்படியால், பெரும் பொருட்செலவில் இவ்வாலயம் அமைக்கப்படவிருப்பதாக தேவஸ்தான தலைவர் மு.வ.கலைமணி கூறினார்.
 
பிரபல மித்தாஸ் குழுமத்தின்  உரிமையாளர் டத்தோ விக்னேஸ்வரன் அனிகலா இணையர், பைலட் விக்னேஷ் குடும்பத்தினர் மற்றும் நிர்வாகத்தினரின் முன்னிலையில் இவ்வைபவம் சிறப்பாக நடந்தேறியது.
 
தேவஸ்தான பிரதான தலைமை குருக்கள் சிவஸ்ரீ முத்து குமார் அவர்கள்  பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டுதலை சமய நெறியோடு  சிறப்பாக நடத்தி வைத்தார்.
 
சபதி ஜெயகிருஷ்ணா அவர்களின் மேற்பார்வையில் ஆலய  கட்டட அமைப்பு சிறப்பாக  நடைபெறும் என நிர்வாகச் செயலாளர் ச.கேசவன் கூறினார்..
 
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் மகா கும்பாபிசேகம் நடத்த முடிவாகியுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு

தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி   கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...

நான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி

சென்னை, ஜூலை 9-  தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.    இன்று கே. பாலசந்தரின் 90ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவர்...

கோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 9-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 13 பேர் இன்று...

தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து

புத்ராஜெயா, ஜூலை 9 –  தேசிய கோட்பாடு கல்விதான்  நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.    நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...

Recent Comments